பக்கம்:மணிவாசகர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுமெனில் அதிலேயே பெரும் பொழுது கழிந்துவிடக் காண்கிறோம். இம் முறையிலும் ஆன்ம யாத்திரை நடை பெறலாம். எனினும் அது யாவர்க்கும் இயலக் கூடிய ஒன்றன்று என்பது வெளிப்படை. மாபெருங் கல்விக் கடலாகிய அடிகள் பல்வேறு சமயங் களும் ஆன்ம யாத்திரை, அதன் விடுதலை என்பவற்றிற்குக் கூறிய வழிகளை யெல்லாம் ஆராய்ந்து பார்த்து இறுதியில் யாவர்க்கும் இயலக் கூடியதான ஒரு வழியைக் கண்டு கூறு கிறார். உலகிடைப் பிறந்தோர் அனைவரும் பெருந் துன்பத்திற் காட்படுவதும், இத் துன்பத்தைப் போக்க எல்லா உயிர் களும் முயல்வதும் யாவரும் அறிந்த ஒன்று. எனவே துன்பங் களை ஒவ்வொன்றாகக் களைய முற்படுவதிலும் எல்லாத், துன்பங்கட்கும் ஆணிவேர் எது எனக் கண்டு அதனைக் களைய் முற்படுவதே அறிவுடைமை. இதற்கு அதிக தூரம் ஆராய்ச்சி செய்துபோகத் தேவை இல்லை. பிறவியே எல்லாத் துன்பங்கட்கும் மூல காரணம் என்பது நன்கு அனைவராலும் அறிந்து ஏற்றுக் கொள்ளப் பெற்ற ஒன்றா கும். அவ்வாறானால் இப் பிறவியை ஒழிப்பதே துன்பங்களி லிருந்து விடுதலை அடைய உள்ள ஒரு வழியாகும். பிறவியை நாமாகப் போக்கிக் கொள்ள முடியாது. எனவே யாருடைய உதவியையாவது நாடித்தான் பிறவியைப் போக்க வேண்டும். யாருடைய உதவியை ஆன்மா நாடு கிறதோ அவன் பிறப்பில்லாதவனாக இருந்தாலொழிய. நம்முடைய பிறவியைப் போக்க அவன் எவ்வாறு உதவ. முடியும்? எனவே, பிறவி இல்லாதவன் துணை கொண்டுதான் இப்பிறவியைப் போக்க முடியும் என்று:உணர்ந்த பிறகும். கூடப் பொறிகள் ஆன்ம யாத்திரையைத் தடை செய்கின் றன. எனவே பொறிகளின் வழிச் செல்லும் மனத்தை நோக்கி அடிகள், - – 17 2奪5。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/269&oldid=852746" இலிருந்து மீள்விக்கப்பட்டது