பக்கம்:மணிவாசகர்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் ஆன்ம யாத்திரை மதுரையில் புறப்பட் டுத் திருப்பெருந்துறையில் முற்றுப் பெறுகிறது. மீட்டு வாரா நெறியருள் புரிபவன்' என்று அடிகள் தம் ஞானாசிரி யனைக் குறிக்கின்றார் என்றாலும் உலகத்திற்கு மணிவாச கரின் அனுபவம் பயன்பட வேண்டும் என்ற பரமகருணை யினாலே இறைவன் ஆன்ம யாத்திரையை முடித்துக் கொண்ட அடிகளை இருக்கு மாறு பணித்து மறைந்துவிடு கிறான். அவர் தாம் மேற்கொண்ட ஆன்ம யாத்திரையை நம் போன்றவர்கட்காக மிக அழகிய பாடல்கள் மூலம் தருமாறு இறையருள் பாலிக்கின்றது. நமக்குக் கருப்பஞ் சாறு வேண்டுமானால் கரும்பு ஆலை யில் அகப்பட்டு நசுங்கித்தான் ஆகவேண்டும். திருவாசகம் என்னும் கருப்பஞ் சாற்றை இவ் வுலகம் பெறுதற்காக மணிவாசகர் என்னும் கரும்பு பிழியப்படுகிறது. இப் பாடல்கள் அப்போது அப்போது எழுதப் பெற். றவை என்று கூறுதற்கில்லை. தான், அவன், அனுபவம் என்ற மூன்றும் ஒன்றாகி அனுபவம் ஒன்று மட்டுமே ஆக இருந்த அடிகளார் அப்பொழுது பாடி இருத்தல் முடியாது. பாடுவோன், பாடல், பாடும் பொருள் என்ற மூன்று இருந் தால்தானே பாட்டுக் கிடைக்கும்? எனவே பின்னர் அடிகள் தம் பழைய அனுபவத்தை நினைந்தும், அது கைநழுவிவிட் டதை நினைந்து அரற்றியும் பாடியவை இவை என்றே கரு துகிறேன். இவ் வனுபவத்தை மீட்டுப் பெற்றுப் பாடுமாறு திருவருள் புரிந்தவன் பொன்னம்பலவனே யாதல் வேண்டும். இக் கருத்தின் நுணுக்கத்தை நமக்கு உணர்த்தவே நம்முன் னோர். சிற்றம்பலத்தானே இவரைப் பாடச்செய்து படி செய்து கொண்டான் என்று கூறினர். அவன் திருவருளால் மீட்டும் அனுபவத்தை நினைவுகூர்ந்து பாடப் பெற்றவை என்பதே அதன் பொருளாகும். - இதைவிடச் சிறந்த கதை ஒன்றும் கூறப்படுகிறது. திரு வாசகத்திற்கு உரை கூற வேண்டும் என்று யாரோ கேட்ட 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/279&oldid=852758" இலிருந்து மீள்விக்கப்பட்டது