பக்கம்:மணிவாசகர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியைக் கூறவந்த அடிகள் இதே சொற்களை இன்னுஞ் சற்று விரிவாகப் பேசிக்காட்டுகிறார். இறைவன் குருந்த மரத்தடியில் தம்மை ஆட்கொண்டபோது ஏற்பட்ட அனுப வத்தை அப்படியே அடிகள் படம் பிடித்துக் காட்டுகிறார். ‘நாயுடல் அகத்தே குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளை தொறும் ஏற்றினன்: உருகுவது உள்ளங் கொண்டு ஒர் உருச் செய்தாங்கு எனக் கள்ளுறு ஆக்கை அமைத்தனன்...' (அண்டப்-172-177) இதனைப் படித்துப் புரிந்து கொண்ட பிறகுதான் திரு. வாசகத்தின் மற்றோர் அடிக்குப் பொருள் விளங்குகிறது. 'உள்ளந்தாள் கின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகாதால், (சதக, 21) என்று அடியைப் பாடும்பொழுது ஒருமுறை ஞானாசிரியன் முன்னர் ஏற்பட்ட இந்த அனுபவம் எப்பொழுதும் "வண்டும் என்று வருந்துகிறார் என அறியமுடிகிறது. உள்ளத்தாள் நின்று உச்சந்தலைவரை எலும்புகள் உண்டு எனவே அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளை தொறும் ஏறினால் அவை குழைவது போன்ற உணர்வு தோன்றுதல் சரியே. ஆனால் உடற்கூறு அமைப்பில் இத் தகைய நிலை நீண்டநேரம் இருத்தல் இயலாத காரியம். அதேபோல இறை அனுபவம் ஏற்பட்டவுடன் நாம் அதனுள் கலந்துவிடுதலின் அதன் பின்னர் நாம், அவன், அனுபவம் என்று மூன்று அற்று அனுபவம் ஒன்று மட்டுமே எஞ்சிநிற். கிறது. இத்தகைய இன்ப அனுபவம் கிடைத்த பின்னர் கை நழுவிய நிலையில்தான் அடிகள் அதனை விளக்கிக் கூறி விட்டு அது போய்விட்டமையின் நெஞ்சும் கல்லாம், கண் இணையும் மரமாம் தீவினையினேற்கே என்று வருந்து கிறார். -- - 274

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/278&oldid=852757" இலிருந்து மீள்விக்கப்பட்டது