பக்கம்:மணிவாசகர்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகினைத்தொறும் காண்தொறும் பேசும்தொறும் - - எப்போதும் அனைத்து எலும்பு உள்ருெக ஆனந்தத் தேன் சொரியும்’ . - (கோத்தும்-3) பொருள் ஒன்றுண்டு என்பதில் ஆனந்தத்தின் இயல்பை உள்ளவாறு விரிக்கின்றார். எப்போதும் என்ற சொல்லைப் பெய்வதன் மூலம் உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்' (குறள் 1281) இயல்பாக உடைய காமத்தை, சிற்றின்பத் தைக் காட்டிலும் இது உயர்ந்தது என்கிறார். ஏன் எனில் எப்போதும் இன்பந் தரும் இயல்பு காமத்திற்கில்லை. இதனை அடுத்து இங்குக் குறிப்பிடப்படும் ஆனந்தத் திற்கு ஒர் இலக்கணம் வகுக்கிறார் அடிகள். இந்த இலக் கணத்தை வகுப்பதன் மூலம் அவர் அதனைத் தாம் அனுப வித்த முறையில் வெளியிடுகிறார். இந்த அனுபவத்தை நேரே பெற்றவர் தவிர ஏனையோர் அதனை இவ்வளவு தெளிவாகக் கூறமுடியாது. அனைத்து எலும்பு உள் நெக' என்ற சொற்களில் ஆனந்தத்தின் இலக்கணம் கூறப்பெறு கிறது. நம்முடைய உடம்பினுள் இருக்கும் எலும்புகள் உள்ளே துளையுடையன. அவற்றுள் எலும்புத் திசு (Bone marrow) இருக்கின்றது. இன்னுங் கூறவேண்டுமாயின் இவ்வெலும் பினுள்தான் வெள்ளை அணுக்கள் (White corpusels) தயா ராகின்றன. எனவே எலும்புக்குள் குருதி ஓட்டம் உண்டு என்பது தெளியப்படும், ஒருசில உணர்ச்சிகள் (தூய ஆழ மான காதல், உண்மையான பக்தி) எல்லை மீதுணர்ந்து தோன்றுமாயின் இந்தக் கடினமான எலும்புகள் குழைவுத் தன்மையை அடைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். அனைத்து எலும்புகளும் உள்ளே நெக அல்லது குழைவ்ை அடையும்படி ஏற்படுகின்ற ஆனந்தமாகிய தேன் பிலிற்றும் இறைவன் திருவடி என்கிறார் அடிகள். இதில் உள்ள் சிறப்பு என்னையெனில் மற்றொர் இடத்தில் இதே உணர்ச் 273

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/277&oldid=852756" இலிருந்து மீள்விக்கப்பட்டது