பக்கம்:மணிவாசகர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது தான் தவறில்லாதது.) என்னும் பழமொழிக்கு இலக்காக மாணிக்கவாசகர்' என்னும் பெயரையே கூற மறந்துவிட்டனர். ஒரு பெரியார் வரலாறு கூறவந்த ஒரு ஆசிரியர் அவருடைய சிறந்ததொரு பெயரையே கூறாது விட்டனரென்பதை நோக்க வியவாதார் யார்? இஃது ஆராய்ச்சி வல்லுநருக்கு ஒரு பெரு விருந்தன்றோ? இனி, இம்மூன்று ஆசிரியர்களுள் பரஞ்சோதி முனிவ ரென்பார் ஏனைய இருவரினும் திருவாசகத்தில் நன்கு பயின்றவர் என முன்னர்க் குறித்ததைச் சிறிது ஆராய்ந்து மேற்செல்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/28&oldid=852759" இலிருந்து மீள்விக்கப்பட்டது