பக்கம்:மணிவாசகர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுந் திருவாசகச் செய்யுள் சான்றாதல் காண்க. மீண்டும் அடிகளின் கூற்றாக மேற்காட்டிய பகுதியிலேயே 'வஞ்சவினை என்னுஞ் செய்யுளை அடுத்துப் பரஞ்சோதி ιλάfrff, 'வறியவனா மொருபிறவிக் குருடன் கையில் வந்தபெரு - விலைமணிபோல் மழலை தேறாச் சிறியவனா மொருமதலை கையிற் கொண்ட செம்பொன்மணி வள்ளம்போல் தேவர் யார்க்கும் அறிவரியாய் சிறியேனை யெளிவந் தாண்ட அருமையறி யேன்.துன்பத் தழுவத் தாழப் பிறிவறியா வன்பரொடு மகன்றாய் கல்லாப் பேதையேன் குறையலதெம் பிரானா லென்னே' (வாதவூரடிகளுக்குபதேசித்த படலம்-56) எனக் கூறுகின்றார். இச்செய்யுளிலுள்ள மழலை தேறாச் சிறியனா மொருமதலை கையிற் கொண்ட செம்பொன்மணி வள்ளம் போல்' என்னுந் தொடர் திருவாசகத்திலுள்ள, "மையிலங்குநற் கண்ணியங்கனே வந்தெனைப்பணி - - கொண்டபின்மழக் கையிலங்குபொற் கிண்ணமென்றலால் அரியையென்றுனைக் கருதுகின்றிலேன் மெய்யிலங்குவெண் aற்றுமேனியாய் , ' மெய்ம்மையன்பருன் மெய்ம்மைமேவினார் பொய்யிலங்கெனைப் புகுதவிட்டுt போவதோசொலாய் பொருத்தமாவதே" (திருச்சதகம். 62) என்னுந் திருப்பாட்டின் முன்னிரண்டடிகளையும், பிறி வறியா அன்பரொடும் அகன்றாய்" என்னுந் தொடர் திரு வாசகத்தில் அடைக்கலப்பத்தில் (9) வது பாட்டின் பிறி வறியா அன்பர் என்று தொடங்கும் அடியினையும் கல்லாப் பேதையேன் குறையலதெம் பிரானாலென்னே' என்னுந் தொடர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/34&oldid=852770" இலிருந்து மீள்விக்கப்பட்டது