பக்கம்:மணிவாசகர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவதாக நாயினிடத்துப் பிறிதொரு அரிய குணங் காணப்படுகின்றது; அதாவது:- "தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமுமின்றித் தனக்கு எத்துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட் படுத்தாது அத்துன்பம் தன்னுடலின் கண்ணதாயிருக்கும் போழ்தும் தன்வாலைக் குழைத்து அவனுக்குத் தன். நன்றி யறிவைக் காட்டுதல் ஆகும். இவ்வுண்மையை, 'யானை யனையவர் நண்பொரீஇ நாயனையாா கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு காய். (நட்பாராய்தல்) என்னும் நாலடியார்ச் செய்யுளும் நன்கு விளக்கியது. இனி, இக்குணம் மக்களிடத்தில் எம்ம்ட்டிற் காணப்படு கின்ற தென்பதைப் பார்ப்போம். கடவுள் நம்பிக்கையுடைஷ் ராய்ச் சிறிது அன்பினையும் மேற்கொண்ட மக்களிற் பெரும் பாலோர் தமக்குத் துன்பம் நேர்ந்துழி அது தாம் முன்செய்த தீவினை காரணமாக வந்தது என அறிந்துவைத்தும் பாழுங்கடவுளே! நீதியற்ற கடவுளே! எம்மை இங்ங்னம் துன்புறுத்தல் தகுமா? நின் கண் கருணையில்லையா?" எனக் - கதறிப்பதறுவதுடன் அந் நம்பிக்கையையும் இழந்து கடவுள், இல்லை என்னும் கொள்கையை உடையராதவைக் கான் கின்றோம். இதனாலும் மக்கள் நாயினுங் கடையரா கின்றனர். ஐந்தாவதாக: நாயினிடம், செயலுக்குக் காரணங் கானும் இயல்புண்டு; மக்களிற் பெரும்பாலோரிடம் அஃதில்லை: இல்லாதது மட்டுமில்லை; திரிபாகக் கானு: தலையும் அறிகின்றோம் எங்ங்னமெனில், ஒரு நாயை ஒர் இளைஞன் மறைவில் நின்று கல்லால் அடிக்கிறான். தன்மீது பட்டதும், தனக்குத் துன்பம் செய்ததும் கல்: ஆனால் எந்த நாயும் அந்தக் கல்லைக்கடிப்பதில்லை; அடித்தவனைக் கண்டால் அவன்மேலே வீழ்ந்து கடிக்கும்; இன்றேல் வாளா போய்விடும். - 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/40&oldid=852777" இலிருந்து மீள்விக்கப்பட்டது