பக்கம்:மணிவாசகர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களுள் யாருக்கேனும் ஓர் துன்பம் வந்தால் அதற்கு மூல காரணம் தாம் முன் செய்த வினையென்று அறியாதது மட்டுமன்று; அவ்வினையினாற் செலுத்தப்பட்டுத் துன்பம் செய்தவர்களிடம் பகைமைபூண்டு, அவர்களைத் துன்புறுத் தக் காண்கின்றோம். எனவே, நாயின் மேலே பட்ட கல் லைப் போன்று, துன்புறுத்தியவர்களே காரணமாயுள்ளவர் என்று தவறாகக் கருதுகின்ற மக்களைவிட, உண்மையான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்துணைச் சிறந்தது என்பதை அறிக. மக்களின் அத்தவறான செயலைக் குறிக்கத்தான் "எய்தவனிருக்க அம்பை: நோவது' என்ற பழமொழியும் எழுந்துவழங்குவதாயிற்று. நாயினிடத்து அக்குணமிருப்பதையும், மக்களிடத்து அஃது இல்லாமையையும் எடுத்துக்காட்டி, அம்மக்கள் அறி. வில்லாதவர்; இரங்கத்தக்கவர் என, வாகீச முனிவர் என் பார், தாமியற்றிய ஞானார் மிர்தம் என்னும் நூலில், - "தெளியா இளையோன் துரந்த குணில்வாய்ச் செல்லாது இளையோ சினவும் வளைவாய் ஞமலியின் அளியரோ அளியர் என்னை ஒளிகொள் காரணம் உன்னா தோரே' என அழகுறக் கூறியருளுகின்றார். இனி, நாயை ஒத்தவன் என்னும் பொருளில் 'நாயேன்" என்றும் நாயனையேன்,என்றும் அடிகள் கூறியதன் கருத்து என்ன? என்பதைப் பார்ப்போம். - மேற்காட்டிய பல நற்குணங்களையுடைய நாயினிடத்து ஒரு இழி குணங் காணப்படுகின்றது; அதாவது தான் வயிறு நிறைய உண்டு தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும், அருவருப்பில்லாமல் புதியதாகவே நினைந்து உண்ணுதல். மக்களும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப்பும் அருவருப்புமில்லாமல் நுகர்தல் இவ் ஆண்மைகள் கண்கூடாகக் காணப்படுவதுடன், * . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/41&oldid=852778" இலிருந்து மீள்விக்கப்பட்டது