பக்கம்:மணிவாசகர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெனைத் தந்த முத்தவோ என்னுந்தொடர், இந்திரியவய மயங்கி என்று தொடங்குந் திருப்பாட்டின் 'சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட (கண்டபத்து -1) "புத்தன்' என்று தொடங்குவதில் "சித்தஞ்சிவமாக்கிச் செய் தனவே தவமாக்கும் அத்தன்.(திருத்தோணோக்கம்-6) முத்தி நெறி' என்னும் முதற் குறிப்பையுடைய பாட்டில் சித்த மல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தன்' (அச் சோப்பதிகம்-1) என்னுந் தொடர்களையும் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருத்தல் காண்க. இங்கு"எடுத்துக் காட்டியவற்றால் பரஞ்சோதி முனிவர் ரனைய இரண்டு ஆசிரியர்களைவிடத் திருவாசகப் பயிற்சி யிற் பெரிதும் சிறந்தவரென்பது தெற்றென விளங்கும். விளங்கவே, அவராற் பாயிரத்துட்கூறப்பட்ட எழுதருமறை கடேரா என்ற முதலையுடைய அடிகளின் துதிப்பாட் டினை உய்த்து நோக்குழி, அஃது அவர் அத்திருவாசகப் பயிற்சிச் சிறப்பினாற் கூர்த்த தமது அறிவென்னும் எழுது கோலாற் கள்ளமற்ற உள்ளமென்னும் படத்தில் அடிகளின் திருவுருவத்தை நன்கு வரைந்து கொண்டு கூறினாரென் பதைச் செவ்வனே விளக்குகின்றது. இங்ங்னம் அறிவு வல்லானொருவன் தன்னாற் காணப் படாத ஒருவனுடைய சில மொழிகளையோ, அல்லது அவ னியற்றிய நூல் ஒன்றையோ பலகாலும் கூர்ந்து கூர்ந்து நோக்குவானாயின் அதன் பயனாக, அவனுடைய உருவம், உள்ளம், உரை முதலிய அனைத்தையும் மக்களுக்கு நன்கு எழுதிக்காட்டி விடுவானென்பது ஒருதலை. இவ்வாறே சேக்கிழார் பெருந்தகையார் ஆளுடைய அரசின் அருண்மொழியாகிய தமிழ்மறைப் பயிற்சி மிகுதி யால் அப்பெரியாரின் மனம், மொழி, மெய்களைப் பெரிய புராணத்திற் பலவிடங்களில் எழுதி மக்கட்குக் காட்டுதல் கண்டு மகிழ்வதற்குரிய தொன்றாகும். திருநாவுக்காக்கள் தம்மைக் கொல்லுதற் பொருட்டுச் சமணர்கள் செய்த பல் .ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/43&oldid=852780" இலிருந்து மீள்விக்கப்பட்டது