பக்கம்:மணிவாசகர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திருக்கின்றோம். இவ்வுடலுடனே இங்கேயே நிலைபெற் அறிருப்பேமா? ஆ! இதை நினைக்குங்கால் எம் உள்ளம் பதறுகின்றதே குருதி கொதிக்கின்றதே! எங்கண்ணுக் கெதிரே பலர் இறந்துபடுகின்றனரே! எம்மைப் பத்துத் திங்கள் சுமந்து வருந்திப் பெற்று, எறும்பும் அணுகவொட் டாமற் குறிக்கொண்டு போற்றிய எம் அன்னை எங்கே? அவட்கு அன்னையுங் காணோமே! யாமும் அவ்வாறு தானே ஆவோம். ஆயின், பின்னர் எங்குப் போவோம்? இங்கு நாமாகவே வந்தேமா? அங்ங்ணமாயின், நாம் இவ்வுல கத்திலே நிலைபெற்றிருக்குமாறு கருதுகின்றபடி இராமல் இறந்துபடுதற்குக் காரணம் என்னை? இதனால் பிறிதொன்று உத்த வந்திருப்பேமா? ஆயின், அது நம்மை இங்கு வரச் செய்தது? எதனால்? தன்னலத்தின் பொருட்டா? எம் தலத் தின் பொருட்டா? நாமறியா தெம்முள்ளே புகுந்து நின்று நல்லன்வந் தியனவுங் காட்டுவது எது? நம்மாற் காணப் படும் இவ்வுலகத்தை ஆக்கியது யார்? என அலைகள் போலும் அணியணியாகத் தோன்றும் இன்னோரன்ன பல வினாக்களை எழுப்பிக்கொண்டு அவற்றிற்கு விடைகண்டு. பிறவிப் பிரயாணத்தில் வெறுப்புற்று. இனி இச்செலவினை ஒழிக்க வேண்டுமெனத் துணிந்து அதற்குரிய நெறி யாதெனத் தெளிந்து, அதன்கண் ஒழுகியிருப்பார்கள். இங்ங்ணம் ஒழுகிய மக்களது ஒழுகலாற்றினைத்தான். "சமயச் உணர்ச்சி என்றும் கடவுள் கொள்கை' என்றும் நமது ஆன்றோர் வழங்குவாராயினர். இனி, சமயம் என்ற சொல்லின் பொருளை ஆராய்ந் தாலும் இவ்வுண்மை நன்கு புலனாகும். எங்ங்னமெணின் சமயம் என்ற சொல். 'காலம்' என்னும் பொருள்படும்; ஆனால்,இச்சொல் யாண்டும் தனித்து வராமல் யாதாயினும் ஓர் வினையோடு கூடியே வரும். இதனை, நாம் எவரேனும் ஒருவரைப் பார்ப்பதற்கு அவரில்லம் சென்று வினவினே மாயின், அங்குள்ளார் அவருக்கு இது வழிபாட்டுச் சமயம் என்றேனும், அல்லது உணவுச் சமயமென்றேனும், அன் கி. so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/58&oldid=852796" இலிருந்து மீள்விக்கப்பட்டது