பக்கம்:மணிவாசகர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ திருச்சிற்றம்பலம் முனனுரை இறைவன் திருவருளால் வெளி வருகின்ற அழுதடி யடைந்த அன்பர் என்னும் ஆராய்ச்சி நூலாகிய இஃது 1930ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. "அழுதடி யடைந்த அன்பர்’ என்ற தலைப்பிலும், இந் நூலுட் காணப்படும் உட்பிரிவுகளாகிய 'மணிவாசகரும் கண்ணப்பரும் திருவாசகமும் பரஞ்சோதி முனிவரும்' என்பன போன்ற தலைப்புகளிலும் பல சபைகளில் 30 ஆண்டுகட்கு முன்னிருந்தே யான் சொற்பொழிவாற்றிய துண்டு. இக்கருத்துக்களை எழுதி நூல் வடிவமாக வெளி யிட்டால் படித்த-படிக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும்’ என்று கூறிய பெரியோர்களின் விருப்பப்படி வெளிவ கின்றது. - இந்நூல் எளியநடையில்லை; கடினமான நடையது. இனி எளிய நடை என்ற சொல்லும் அரசியற் செல் வாக்குள்ள சிலரால் விபரீத வியாக்கியானம் செய்யப்படு கின்றது. உதாரணமாக, கடற்கரை' என்று எழுதுவது தவறு: கடல்க்கரை' என்றுதான் எழுதவேண்டுமென்பது முன்னரே படிப்படியாக மறைந்து வருகின்ற தமிழிலக் கணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு இதனினும் வேறு உபாயம் வேண்டாம் அன்றோ இத்துணைக் கேட்டிற்கும் மூல காரணம் எளிய நடைப் பிரசாரமே யாகும். இக்கேடுகள் மலிந்து காணப்படும் இக்காலத்திற்குத் 'தமிழ் மறுமலர்ச்சிக் காலம்' என்று பெயர் கூறப்படுகின்றது. 'மறு’ என்ற சொல் குற்றம்' என்ற பொருளையும் தருமல் லவா? எனவே தமிழ்மொழியிலே குற்றங்கள் மலருகின்ற காலம்' என்று கருதினால் அதிலே குற்றமில்லையல்லவா? மக்களின் கல்வித்தரம் குறைந்து வருகின்ற காலத்தில் அவர் களுக்கு விளங்கும்படி எளிய நடையில் எழுத வேண்டியது தான். அதற்காக இலக்கணக் கொலை, ஒலிக்கேடு முதலிய வற்றைப் பயன்படுத்தலாகாது அன்றோ? திருச்சிராப்பள்ளி - * - - 19—12-56 அ. மு. சரவணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/6&oldid=852798" இலிருந்து மீள்விக்கப்பட்டது