பக்கம்:மணிவாசகர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்திருப் பணிப்பயனால் மீண்டும் எனக்குப் பிறப்பில்லை யெனப் பணித்தனர் பெரியோர் பலர். பல பிறவிகள் எடுத்துப் பரமனுக்குப் பணியாற்ற வேண்டுமென்னும் பேரவாவுடைய எனக்கு அப்பெரியார் கூற்று கூற்றாகத் தோன்றிற்று; ஆதலின் இவ்வெள்ளைத் தின்றால் அவ்வெள் ளுக்கடனை இறுக்கும் பொருட்டாகவேனும் இன்னு மொரு பிறவியெடுத்து இவ்விறைவனுக்குப் பணியாற்றலா மெனக் கருதிச் செய்து விட்டேன்; பிழைபொறுக்க? என்று வேண்ட, அங்ங்னமாயின் எனக்குஞ் சிறிது தருவாயாக' என அவன் மிச்சிலெள்ளை வாங்கி அப்பாண்டியன் தின்றா னென வரலாறு கூறுவதிலிருந்து பரம்பரன்பணிக்குப் பயன் படுமேல் பிறவியைப் பெரிதும் வேண்டுவர் பெரியா ரென்பது வெள்ளிடை மலை - மேற்காட்டிய பாண்டியன் வரலாற்றுண்மையைப் பட்டினத்தடிகள் திருவிடைமருதுர் மும்மணிக்கோவையில் 'வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ஒடும் பன்னரி ஊளைகேட் டரனைப் பாடின வென்று படாம்பல வளித்தும் குவளைப் புனலில் தவளை யரற்ற ஈசன் தன்னை யேத்தின வென்றும் காசும் பொன்னுங் கலந்துத்துவியும் வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவனெச்சிலை நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல எம்மித் தலையுங் கிடக்க வேண்டுமென்று அடுத்தடுத் திரந்தும் கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்று நாய்க்கட்ட மெடுத்தும் 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/71&oldid=852811" இலிருந்து மீள்விக்கப்பட்டது