பக்கம்:மணிவாசகர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய வன்பின் வரகுண வேந்தரும்' எனக் கூறியவாற்றான் அறிக. இன்னும் இவ்வுண்மையைச் சேக்கிழார் பெருந்தகை 'திருத்தொண்டர் புராணத்தில் அடியார்களின் இலக்கணங் கூறும்வழி' "கூடு மன்பினிற் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' என விளக்கியருளினமையுங் காண்க. - இன்னும் அவர், தில்லையின்கண் திருக்கூத்தப் பெரு மான் காட்சியாற் பெருகிய இன்பத்தில் ஈடுபட்ட நம்பியாரு ரர் கூறுங் கூற்றாக வைத்து, - "தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் றிருகடங் கும்பிடப் பெற்று, மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு வாலிதா மின்பமா மென்று கண்ணில் ஆனந்த வருவிர்ே சொரியக் கைம்மல ருச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி யறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்" எனக் கூறியருளிப்துங் காண்க. இங்ங்னம் ஒருவகையாற் பிறப்பு வேண்டாமெனவும், பிறிதொரு வகையால் அது வேண்டுமெனவுங் கூறுமாற். றால் ஒன்றுக்கொன்று முரண்படாமையும் ஒர்ந்தறிக. இனி, பிறப்பைத் துன்பமெனவும், நோய் எனவும் தீராநோய் எனவும், மூலநோயெனவும் பெரி யோர் க ள் கொண்டார்களெனவே, அப்பெரியாருள் தலை நிற்பவ. ராகிய நமது அழுதடியடைந்த அன்பரும்,' - 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/72&oldid=852812" இலிருந்து மீள்விக்கப்பட்டது