உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த இரண்டு சகோதரர்களும் கலந்து கொண்டு உரையாற்றும் திருமணங்களுக்குச் சென்றிருக்கின்றேன். அநேகமாக கே.கே. நீலமேகம் அவர்கள்தான் அந்த மணவிழக்களுக்குத் தலைமை வகிப்பார். 66 ஒரு முறை ஒரு திருமணத்தில் பேசும்போது - பழனியப்ப முதலியார் சுயமரியாதை சீர்திருத்தம் பற்றிபேசும்போது - குடந்தை தளபதி கே. கே. நீலமேகம் அவர்களைக் கேலி பேசினார். இவ்வளவு சுயமரியாதை சீர்திருத்தம் பேசுகின்ற கேகே. நீலமேகம் அவருடைய சுருட்டுக் கம்பெனிக்கு 'மும்மூர்த்தி வினாயகர் சுருட்டுக் கம்பெனி' என்று என் று பெயர் வைத்திருக்கிறாரே, அப்படி வைக்கலாமா? என்று கேட்டார். 66 அதே விழாவில் நான் இறுதியாகப் பேசும்போது, மும்மூர்த்தி வினாயகர் சுருட்டுக் கம்பெனி என்று பெயர் வைத்திருப்பது உண்மைதான்; வினாயகரை அந்தச் சுருட்டிலே சுருட்டி, அதை வாயிலே பற்ற வைத்துக் கொளுத்துகின்ற பணியை கே.கே. நீலமேகம் செய்திருக்கிறார்; அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது" என்று நான் சொன்னேன். அப்போதே ‘இந்தப் பையன் இவ்வளவு குறும்புத்தனமாகப் பேசுகிறானே!' என்று பழனியப்ப முதலியர் சொன்னார். அந்தக் குறும்புக்காரன் இப்போது இந்த விழாவிற்குத் தலைமை வகிக்கவும், அதிலே பழனியப்ப முதலியார், ராமசாமி முதலியார் போன்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டு நாங்களே சொல்லத் தவறிவிட்ட - பலஅறிவுரைகளை மணமக்களுக்கு வழங்கவுமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிலே ராமசாமி முதலியார் அவர்கள் பேசும்போது, காதலர் இருவர் கருத்தொருமித்து இருக்கக்கூடாது என்று ஒரு புதிய தத்ததுவத்தையே சொன்னார் (சிரிப்பு) இது தத்துவங்கள் எடுபடும் காலம். (பலத்த சிரிப்பு). 'தத்துவங்கள்' தத்துபித்து என்றிருந்தாலும் கூட அதற்கு 'தத்துவம்' என்ற பெயர் வைத்துவிட்டால் அவைகள் எடுபடும் காலம். ஆனால் ராமசாமி முதலியார் சொன்னது அப்படிப்பட்ட தத்துவம் அல்ல. உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தத்துவம். 7