உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிப்பிராய பேதங்கள் இருக்க வேண்டும். ஆனால், அபிப்பிராய முரண்பாடுகள் ஏற்பட்டுவிடக் கூடாது. ஏனென்றால், வேறுபாட்டிற்கும், முரண்பாட்டிற்.கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. கருத்து வேறுபாடுகள் இருந்திட வேண்டும்; ஆனால் அந்த வேறுபாடுகளே முரண்பாடுகளாக ஆகிவிடக்கூடாது என்ற அரிய எண்ணத்தைத்தான் இங்கே ராமசாமி முதலியார் அவர்கள் வெளியிட்டார்கள். சுயமரியாதைத் திருமணச் சட்டம் தந்தை பெரியார் அவர்களால் - ஆதரிக்கப்பட்ட எத்தனையோ அரசுகள் தமிழ் நாட்டிலே இருந்திருக்கின்றன. அவைகள் ஒரு காலத்திலே ராஜாஜியினுடைய அரசாக இருந்திருக்கலாம்; ஒமந்தூர் ராமசாமி ரெட்டியாருடைய அரசாக இருந்திருக்கலாம்; பெருந்தலைவர் காமராசருடைய அரசாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவரால் ஆதரிக்கப்பட்ட அரசுகளானாலும், அல்லது அவர்பார்த்து உட்கார வைத்த அரசாக இருந்தாலும், அப்படிப்பட்ட அரசுகள் எல்லாம் செய்யமுடியாத காரியத்தை - சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக ஆக்க வேண்டும் என்கின்ற அந்தக் காரியத்தை செய்து முடித்த அரசு பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையிலே அமைத்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதையும் இந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் அதுவும், இனிமேல் நடைபெறுகின்ற கின்ற மரியாதைத் திருமணங்கள்கூடச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று 'ரெட்ராஸ்பெக்ட் எபக்ட்' கொடுத்து ஒரு மசோதாவைக் கொண்டு வந்து, அதை நிறைவேற்றிய பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களைத்தான் சாரும். - று எனவே, சட்ட வடிவம் பெற்றுவிட்ட இந்தச் சுயமரியாதைத் திருமணம் திடீர் என்று பெரியார் அவர்களாலோ அல்லது அண்ணா அவர்களாலோ உருவாக்கப்பட்ட ஒரு முறை அல்ல. இது அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. உருவாக்கப்பட்டதற்கும், அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. உருவாக்கப்படுவது என்றால் இல்லாத ஒன்றைப் படைப்பது. இருக்கின்ற ஒன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுதான் இந்தச் சுயமரியாதைத் திருமணம். 8