உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி, அந்த நாடகம் ஈட்டிய வெற்றியின் அடிப்படையில் புதுவையிலே திராவிடர் இயக்க மாநாடு ஒன்றினைக் கூட்டி அந்த மாநாட்டிற்குத் தந்தை பெரியார் அவர்களையும் பேரறிஞர் அண்ணா அவர்களையும் அழைத்து அந்த மாநாட்டை நடத்துகிற நேரத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றி நாங்கள் எல்லாம் மாநாட்டினுடைய அமைப்பாளர்களாக இருந்து நடத்தியநேரத்தில் அந்த நாடகத்தைப் பார்த்து வெகுண்டு போயிருந்த மாற்றுக் கட்சிக்காரர்கள் என்னைத் துரத்தித் துரத்தி அடித்துப் பாண்டிச்சேரி வீதியிலே நான் உயிரோடு இல்லை என்ற நம்பிக்கையோடு ஒரு சாக்கடையிலே தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டார்கள். யாரோ சில பேர் என்னை அவர்களுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று என்னை உயிர் பிழைக்க வைத்தார்கள். பிறகு இரவோடு இரவாகப் பெரியாரும், அண்ணாவும் தங்கியிருந்த இடத்திற்கு நான் செல்லவேண்டும். அப்படிச் செல்லும்போதுகூட வழியிலே எதிரிகள் கண்டால் எனக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எனக்கு ஒரு கைலியைக் கட்டிவிட்டுத் தலையிலே ஒரு தொப்பியை வைத்து ஒரு முஸ்லீமைப் போல மாறுவேடத்தோடு பெரியாரிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அந்த அளவிற்கு நான் அன்று மாறு வேடத்திலே தப்பி ஆபத்திலே இருந்து மீள்வதற்குக் கூட உதவிய உடைகள் உங்களுடைய உடைகள்தான். இஸ்லாமிய சமுதாயத்தினுடைய ய லுங்கியும்-தொப்பியும்தான். சீர்கேடுகள் - பிராமண குலத்திலே பிறந்தவர் பாரதியார். அந்தப் பாரதியார் என்ன பாடினார் - ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என்று! ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடும் அறிவிலிகளே! அறிவற்றவர்களே! ஒரே கடவுள்தான். அது நம்முடைய மனசாட்சிதான். நம்முடைய உள்ளம்தான். மக்களுக்கு உழைப்பதுதான் கடவுள் தொண்டு என்று. இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோமே அந்த 18