உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றாண்டு விழாவினுடைய கதாநாயகர் பாரதியார் எழுதி வைத்து இருக்கிறார். ஆனால், அந்தப் பாட்டை மாத்திரம் இந்த நூற்றாண்டு விழா நேரத்தில் யாரும் பாடிக்காட்டமாட்டார்கள். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" என்பதைப் பாடிக் காட்டுவார்கள். நமக்கு ஆட்சேபணை இல்லை. 99 - ‘ஒம்சக்தி! ஒம்சக்தி!' என்று பாடினார் என பாடிக்காட்டுவார்கள். ஆனால் ஒரு புலவனுடைய வரலாற்றில் ஒரு கவிஞனுடைய வரலாற்றில் தொடக்க காலத்திலே பாடியவை எவை? இடைக்காலத்திலே பாடியவை எவை? இறுதிக் காலத்திலே பாடியவை எவை? என்று தொகுத்துப் பார்த்தால் இறுதிக் காலத்திலே பாடிய பாடல்களிலே ஒன்றாகத்தான் ‘ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்' என்ற அந்தப் பாடல் இன்றைக்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், பாரதியாரை நாஸ்திகன் என்று று யாரும் சொல்லவில்லை. பாரதியார் கடவுளை இழித்தும், பழித்தும் பேசினார் என் என்று யாரும் கூறவில்லை. பெரியாரை அண்ணாவை அவர்கள் வழிநிற்கின்ற எங்களை மாத்திரம் 'கடவுளை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள்' என்று கூறுகிறார்கள். சமுதாய மாற்றம் று முதலிலே நாம் செய்து முடிக்க வேண்டிய மாற்றம் சமுதாய மாற்றமாகும். அந்தச் சமுதாய மாற்றத்திற்கு நமக்குத் துணை நிற்க வேண்டியவர்கள் யார்? ஆடவர்களைவிட பெண்டிர்தான். தாய்க்குலம்தான் நமக்குத் துணை நின்றிடவேண்டும். - தமிழகத்தில் புறநானூறு சங்க இலக்கியங்கள் இவைகளிலே காணப்படுகின்ற தாய்க்குலத்திற்கும் இன்று நாம் சந்திக்கின்ற தாய்க்குலத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உணராதவர்கள் அல்ல. புலி ஒன்று பாய்ந்து வந்தபொழுது தன் கையிலே உள்ள முறத்தை எடுத்து அந்தப் புலியைத் துரத்தினாள் என்று நம்முடைய சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. புலியையே தன் கையிலே உள்ள முறத்தினால் துரத்தினாள் ஒரு மறத்தி என்று சங்க இலக்கியம் சொல்வதையும் படிக்கிறோம். அதைப் படித்துவிட்டு தெருவிலே போகிற நேரத்தில் வழியிலே பூனை ஒன்று குறுக்கே போனால் பயந்துகொண்டு பொல்லாத சகுனம் ம் எ என்று வீட்டிற்கு 19