உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்புகிறோம். அந்தச் சூழ்நிலையையும் காணுகிறோம். ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அந்தச் சமுதாயத்தினுடைய ஆணிவேராக இருக்கின்ற தாய்மார்கள்தான் அதற்குக் காரணகர்த்தாக்களாக இருந்திட முடியும். இன்றைக்கு இந்தியத் திருநாட்டையே ஒரு பெண்மணி ஆளுகிறார் என்றால், அந்தப் பெண்மணிக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறதென்றால், ரஷ்ய நாட்டினுடைய அதிபர் பிரஷ்நேவ் ன்றைய தினம் இந்தியாவிற்ஞகு வருகை தந்து திருமதி இந்திராகாந்தி அவர்களோடு கலந்து பேசி ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு ஒப்பற்ற தலைவி இந்திரா காந்தி என்று பிரஷ்நேவ் பாராட்டுகிறார் என்றால் என்ன காரணம்? அத்தகைய உள்ளங்களில் ஆரம்ப காலத்திலிருந்து கொழுந்து விட்டெரியச் செய்யப்பட்ட இந்தியாவினுடைய விடுதலைக் கனல் இந்திய நாட்டு மக்களுக்காகப் பாடுபட வேண்டுமென்கின்ற அந்தப் பணியாற்றும் தன்மை இவைகள்தான் அவைகளுக்கெல்லாம் காரணம். அதைப் போல நம்முடைய வீட்டிலே பெண் குழந்தைகளானாலும், ஆண் குழந்தைகளானாலும் முறையே வீராங்கனைகளாக, வீரர்களாகத் திகழ - நம்முடைய தாய்மார்கள் அவர்களையெல்லாம் பழக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். - று இங்கே வீற்றிருக்கின்ற மணமகன் எதிரே இருக்கின்ற தாய்மார்களுக்குத்தான் இவ்வளவும் சொன்னார் என்று கருதிக் கொள்ளாமல் தனக்கும் சொன்னதாகக் கருதிக் கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திட வேண்டும். சிந்திக்க வேண்டும் சாதிக்காரர்கள் அல்லாதவர்களாக ற தாழ்த்தப்பட்டவர்களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக, உயர் இருக்கின்ற சமுதாயத்தினர்தான் இன்னமும் மதத்தின் பெயரால், புராணத்தின் பெயரால், கடவுளின் பெயரால், சாத்திர, சம்பிரதாயங்களின் பெயரால் தங்களைத் தாங்களே அடிமைகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிமைத் தளையிலிருந்து ஆணும் பெண்ணும் விடுதலை பெற்றாக வேண்டும். அதற்குத்தான் தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் அயராது பாடுபட்டார்கள்; அவர்கள் வழி நின்று நாமும் பாடுபட்டு வருகிறோம். உ 20