பக்கம்:மணி பல்லவம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

81

முதலிய சிறப்புப் பரிவாரங்கள் சென்றதனால் இவர்கள் வீதியையும் வீடுகளையும் பார்த்தது போக, வீதியிலும் வீடுகளிலுமிருந்து இவர்களைப் பலர் வியப்போடு பார்த்தனர். அரச குடும்பத்துக்கு ஒப்பான பெருஞ்செல்வக் குடியினர் யாரோ பல்லக்கில் போகிறார்கள் போலும் என்ற வியப்பு அவர்களுக்கு.

பல்லக்கில் போகும்போது இளங்குமரனும், ஓவியன் மணிமார்பனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு அதிகமாக வாய்ப்பு நேரவில்லை. நாளங்காடியிலிருந்து புறப்பட்டுச் சிறிது தொலைவு வந்ததும், “பூதசதுக்கத்தில் படையலிட்டபின் உங்களுக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டு வந்து கொடுத்தாளே, அந்தப் பெண் யார் ஐயா?” என்று ஓவியன் தற்செயலாகக் கேள்வியெழுப்பின போதுதான் இளங்குமரனுக்கு முல்லையின் நினைவு வந்தது. அதுவரை முல்லைக்குக் துணையாகவேதான் அங்கு வந்திருந்தோம் என்ற நினைவு அவனுக்கு இல்லை. அவன் அதை முற்றிலும் மறந்தே போயிருந்தான்.

‘ஆகா! என்ன தவறு செய்து விட்டேன்? முல்லை உடன் வந்தது எனக்கு எப்படி, மறந்து போயிற்று? புறப்படும் போது அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடை யார் என்மேல் சந்தேகப்பட்டது சரிதான் என்பது போலல்லவா நடந்து கொண்டு விட்டேன்! முல்லை யார் துணையோடு இனிமேல் வீட்டுக்குப் போவாள்? நாளங்காடிச் சந்தியில் தனியாக நின்று திண்டாடப் போகிறாளே’ என்று எண்ணி இளங்குமரன் தன்னை நொந்து கொண்டாலும், அவனால் உடனடியாகப் பல்லக்கிலிருந்து இறங்கி நாளங்காடிக்கு ஓடிப் போய்விடத் துணிய முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருக்கும் ஓவியனுக்கு வாக்களித்த உதவியைச் செய்யாமல் இறங்கிப் போவது பாவம் என்று எண்ணினான் அவன். முல்லை ‘எப்படியாவது தானாகவே வீட்டுக்குப் போய் விடுவாள்’ என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய அப்போது அவனுக்கு வாய்ப்

ம-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/82&oldid=1141741" இலிருந்து மீள்விக்கப்பட்டது