370
மணிபல்லவம்
விசாகை கண்கள் மலர அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அவ்வளவு பெரிய பொருளை ஏற்றுக் கொள்கிற சக்தி இந்தப் பாத்திரத்துக்கு இல்லை ஐயா!”
“பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொல்லி யிருக்கிறார்கள் அம்மையாரே; இந்தப் பாத்திரத்தில், இடுவதற்கு ஏற்ற பொருள் பக்திதான்.”
இதைக் கேட்டு விசாகை சிரித்தாள். பொய்மையைச் சிதைக்கும் அந்தச் சிரிப்பில் சத்தியம் ஒளிர்ந்தது.
“உங்களை இதற்கு முன்பே நான் ஒருநாள் பார்த்திருக்கிறேன் ஐயா! ஆனால் அப்போது உங்களிடம் இவ்வளவு பணிவையும், பண்பையும் விநயத்தையும் என்னால் பார்க்க முடியவில்லையே?”
“எங்கே பார்த்தீர்கள் அம்மையாரே?”
“காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விகாரத்து வாயிலில், ஒரு துறவியை முரட்டுத்தனமாக நீங்கள் கைப்பற்றி இழுத்துப் போனபோது பார்த்தேன். இன்று பாத்திரமறிந்து இடும். பக்திப் பிச்சையில் சிறிது அன்றும் அவருக்கு இட்டிருக்கலாமே?” இளங்குமரன் முதல் அனுபவமாக ஒரு பெண்ணின் கேள்விக்கு முன் நாணித் தலைகுனிந்தான்.
சினங்கொண்டு பாய்ந்த நகைவேழம்பரை எதிர்த்துத் தடுத்தபோது ‘சிங்க நோக்கு’ என்று இலக்கிய ஆசிரியர்கள் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் நேராய் நிமிர்ந்த கம்பீரப் பார்வையை நீலநாக மறவரிடம் கண்டான் ஓவியன் மணிமார்பன். பக்கங்களிலும், பின்புறமும், விலகவோ திரும்பவோ செய்யாமல் எதிரே மட்டும்