பக்கம்:மணி பல்லவம் 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57.1

தெரியாமல் நான் உன்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்வது சாத்தியமில்லை முல்லை!" என்றான் இளங்குமரன்.

"சாத்தியமிராதுதான். என்னுடைய இந்த இரண்டு கைகளாலும் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருடைய தோள்களில் புண்பட்ட போதெல்லாம் மருந்து தடவிக் காயத்தை ஆற்றினேன் நான். இப்போது இவ்வளவு காலத்துக்குப்பின் அந்தத் தோள்களில் காயம் பட்ட தழும்பும் தெரியவில்லை. அவை சுந்தரமணித் தோள் களாகப் பொன்நிறம் பெற்று மின்னுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்தத் தோள்களுக்கு மருந்திட்டு அவற்றைக் காத்தவளுடைய கைகளுக்கு இன்றுவரை அந்தத் தோள்கள் நன்றி மறந்தவையாகவே இருக்கின்றன என்பதை நினைப்பதுதான் எனக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது ஐயா.”

முல்லை இப்படி இன்னும் குழந்தைத் தன்மை மாறாமல் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சிறு பிள்ளைக் கதை போலப் பின்னிப் பின்னிச் சொல்லி யதைக் கேட்டு இளங்குமரன் மேலும் சிரித்தான்.

“முல்லை! இன்று நீ யாரைக் குறை சொல்லு கிறாயோ அந்த மனிதன், மார்பிலும் தோளிலும் காயம் படுவதைக் கவிகள் விழுப்புண்கள் என்று கூறிப் புகழின் முத்திரைகளாகப் போற்றியிருக்கிறார்கள்; ஆகவே நீ இவற்றை மருந்திட்டு ஆற்ற வேண்டாம் என்று சொல்லி அந்த நாளிலேயே உனக்கு எச்சரிக்கை செய்தது உண்டா, இல்லையா? அன்று நீ அவன் தனக்கு மருந்திட வேண்டாமென்று மறுத்ததையும் பொருட் படுத்தாமல் அவனுக்கு மருந்திட்டுக் காயங்களை ஆற்றிவிட்டு இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு வந்து மறுபடியும் உன் சொற்களால் அதே மனிதனுடைய மனத்தைக் காயப்படுத்தலாமா? இது உனக்கு நியாயமா? அன்று ஆற்றிய காயத்துக்கு நீ இன்று வந்து பயனை எதிர்பார்ப்பதும் பண்பில்லையே? பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் உயர்ந்தவைகள் அல்லவே? அப்படிப் பயனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/121&oldid=1144510" இலிருந்து மீள்விக்கப்பட்டது