பக்கம்:மணி பல்லவம் 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

575


பிறருடைய வேதனைகளுக்கு இரங்கும் அருளாளன் ஒருவனுடைய கருணை நகையாகவே இலங்கிற்று.

இவர்கள் இரண்டு பேரும் இப்படிப் பேசத் தயங்கி நின்ற சமயத்தில் இந்தக் குழப்பத்திலிருந்து இரண்டு மனங்களையுமே விடுவிக்க வந்தாற்போல ஒவியன் மணி மார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்தார்கள். இலவந்திகைச் சோலையில் வந்து தங்கியிருந்த ஒவியனை இந்திர விழா முடிகிறவரை நீ படைக்கலச் சாலையிலே வந்து தங்கிக் கொள்ளலாம்' என்று நீலநாக மறவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கித் தன் மனைவியோடு அப்போது அங்கு புறப்பட்டு வந்திருந்தான். முல்லையின் கேள்விகளுக்கும், ஆசைகளுக்கும் மறுமொழி சொல்லியும் சொல்லாமலும் இரண்டு விதமான நிலைகளுக்கு நடுவே தவித்துக் கொண்டிருந்த இளங்குமரனுக்கும் மணிமார்பனுடைய வரவு இப்போது நிறைந்த நிம்மதியை அளித்தது.

விலங்குகளை மாட்டிக் கொண்டு அவற்றால் பூட்டுண்டு கிடக்கும் கைகளே அவற்றைக் களைந்து கழற்ற முடியாமல் தவிக்கும்போது வேறு கைகள் வந்து கழற்றினாற் போலத் தன் மனத்தின் திண்மைகளை இளக்கும் நளினமான சூழ்நிலைகளோடு முல்லை எதிரே வந்து நின்றுகொண்டு ஒவ்வொரு வார்த்தை யாலும் தன்னை வளைத்து இறுக்கிச் சொல் விலங்கு பூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மணிமார்பன் வந்து விடுவித்ததாகத் தோன்றியது, இளங்குமரனுக்கு. ஆனால் முல்லைக்கோ தன் மனத்தின் இரகசியங்களையெல்லாம், சொல்லித் தீர்த்துவிடுவதற்கிருந்த கட்டுக்காவலற்ற சுதந்திரமான சமயத்தில் திடீரென்று யாரோ வந்து தன் மனத்துக்கும் நாவுக்கும் விலங்கு பூட்டிவிட்டாற்போல் இருந்தது. அழகிய கண்களைத் திறந்து மருள மருளப் பார்க்கும் அந்தப் புள்ளிமானையொப்ப, இருந்தாற் போலிருந்து தானும் பேச முடியாதவளாகவே மாறி விட்டதாக உணர்ந்தாள் முல்லை. அவள் மனத்திலும் நாவிலும், நினைவாகவும் சொல்லாகவும் விளையாடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/125&oldid=1144514" இலிருந்து மீள்விக்கப்பட்டது