உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மணிமகுடம் வருகிறான். குள்ள மனிதன் விளக்கடி மனிதனிடம் வந்து நின்று, அவன் ஆகாயத்தைப் பார்த்து சிந்திப்பது போலவே தானும் ஆகாயத்தைப் பார்த்து சிந்திப்பது போல நடித்து) குள்: ஏ, சந்திரனே! நீ ஒரு கற்கண்டுக் கட்டி! உன்னைச் சுற்றி இந்த நட்சத்திர எறும்புகள், மொய்த்திருக்கின்றனவே, ஏன்? ஆகா - இதோ, இந்த ஆகாயத்து வெள்ளை எறும்புகளை எண்ணப் போகிறேன் - ஒன்று! இரண்டு! மூன்று! நான்கு! ஐந்து! ஆறு!... (விளக்கடி மனிதன் சிரித்தபடி குள்ளனின் முதுகில் தட்டிக் கொடுத்து) வி.மனிதன்: என்னப்பா நட்சத்திரங்களை எண்ணுகிறாயா? ஆறு வரையில்தான் இதுவரை எண்ணியிருக்கிறாய்? குள்: ஆறு என்றால் ஆறு லட்சம் எண்ணியிருக்கிறேன். வி.மனிதன்: சந்திரன் ஒரு கற்கண்டு நட்சத்திரங்கள் அதைச் சுற்றியுள்ள எறும்புகள்! சபாஷ்! நல்ல கற்பனை... இந்த குள்: அதுவும் என் சொந்தக் கற்பனை.. வி.மனிதன்: மிகவும் சரி! ஆனால் -இந்தக் கற்கண்டை, எறும்புகள் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கின்றனவே; எறும்புகளின் குணம் அதுவல்லவே - கற்கண்டின் மேலேயே போய் மொய்த்துவிட வேண்டுமே! குள்: அதென்னமோ எனக்குத் தெரியாது - பெரிய தத்துவ ஞானியும், மக்கள் தொண்டன் ஆசிரியருமான ஸ்ரீஜத் அரிஹரநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார் - இதோ பத்திரிகை! (நீட்டுகிறான்) (விளக்கடி மனிதன் பத்திரிகையை வாங்குகிறான். இந்த உரையாடல்களை பொன்னழகன் என்னும், அந்த கட்டு மஸ்தான தோற்றமுள்ள மனிதன், தனது குறுந் தாடியைத் தடவியபடி ரசித்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/15&oldid=1706410" இலிருந்து மீள்விக்கப்பட்டது