கலைஞர் மு. கருணாநிதி 7 வி. மனிதன்: (குள்ளனிடம்) அப்பனே! மக்கள் தொண்டன் ஆசிரியர், சந்திரனைக் கற்கண்டு என்றும் நட்சத்திரங்களை எறும்புகள் என்றும் கூறினார் அல்லவா? இப்போது நான் ஒன்று கூறுகிறேன், கேள்! சிலந்தி வலை பார்த்திருக்கிறாய் அல்லவா? குள்: அது என்ன அத்திப்பூவா? ஆடிப் பிறையா? பார்த்திருக்கிறேன். வி.மனிதன்: அந்த சிலந்தி வலையை ஞாபகம் வைத்துக் கொண்டு, இப்போது ஆகாயத்தைப் பார்! அழகான குளிர்மயமான அந்தப் பூரண சந்திரன், ஒரு சிலந்தி போலவும் -அந்த ஒளி விடும் நட்சத்திரங்கள், சிலந்தி வலையில் சிக்கி உயிர்விடும் பூச்சிகளைப் போலவும், காட்சி தருகின்றன அல்லவா? குள்: ஆமாம்! - ஆமாம்! வி.மனிதன்: இதைப் போலத்தானிருக்கிறது நம்முடைய நாடும்! அதாவது ஆட்சி பீடமானது... குள்: சந்திரனைப் போலவும், ஜனங்கள் நட்சத்திரங்களைப் போலவும்... வி.மனிதன்:... என்று மக்கள் தொண்டன் பத்திரிகை எழுதும்! நான் சொல்லுகிறேன். ஆட்சிபீடம் சிலந்தி போலவும், மக்கள் அதன் வலையில் சிக்கிவிட்ட பூச்சிகள் போலவும் என்று! - குள்: சரியான பேச்சு - ஒரு வேளை நீங்கள் அந்த மக்கள் மன்றத்து உறுப்பினரோ? வி.மனிதன்: இல்லை - இது என் சொந்த அபிப்ராயம் உனக்கு மக்கள் மன்றத்தைப் பற்றித் தெரியுமா? குள்: தெரியுமே - பொன்னழகன் என்பவர் பெரிய தலைவர்! நல்ல பேச்சாளி! தியாகி! அதேபோல அல்லி என்ற ஒரு பெண்மணி அவளும் நன்றாகப் பேசுவாள்! அவர்கள் நடத்துகிற சங்கம் ஆட்சி பீடத்தை மாற்றி, ஜனங்கள் நாட்டை ஆள வேண்டும் என்று
பக்கம்:மணி மகுடம்.pdf/16
Appearance