கலைஞர் மு. கருணாநிதி 15 புது: வேறுபாடு என்றால் பரவாயில்லை... முரண்பாடுதான் இருக்கக் கூடாது. பொன்: சரி, போகலாமா? (மூவரும் போகிறார்கள்) காட்சி 3 (மக்கள் மன்றம் - அதே இரவு அல்லியும் தொண்டர்களும் கவிஞரும் இருக்கிறார்கள்) "பேரன்பு கொண்டவரே, பெரியோரே, என் பெற்ற தாய்மாரே, நல் இளஞ்சிங்கங்காள்!" என்று தொடரும் பாரதிதாசன் பாட்டைப் பாடுகிறார். அல்லி: அருமையான கவிதை - கவிஞரே!.. பாம்புக் கூட்டம் போராடும் பாழ் நிலத்தைப் புதுக்கியவர் யார்? எழுச்சி நிறைந்த கேள்வி - இந்த கேள்வி மணிமகுடபுரியின் மக்கள் இதயத்திலே கிளம்புமானால் - "யார்?" "யார்?" என்ற கேள்விக்குறி அங்கிங்கெனாதபடி எங்கும் தோன்றி விடுமானால் - ஒரே நாளில் மணிமகுடம் மக்கள் மகுடமாகி விடும்! " கவிஞர்: அல்லி! கவிஞரின் நெஞ்சிலே பிறந்த கவிதைக் குழந்தை உன்னைப் போன்ற வீரப் பெண்மணிகளால் தாலாட்டி வளர்க்கப்பட வேண்டும்! அல்லி: தாலாட்டுவதா? அய்யோ.. எழுச்சி மயமான கவிதைக் குழந்தைகளை நான் தாலாட்டி தூங்க வைக்க மாட்டேன். மக்கள் இதயமெனும் தாழ்வாரத்திலே தவழ விடுவேன். வேல் கைக் கொடுத்து “வென்று வா" என அனுப்புவேன் - கவிஞரே - இப்படி உணர்ச்சிக் காவியங்களை, ஏழைகளை வாழ்விக்கும் உரிமைப் பாடல்களை, கோழையையும் கொள்கை வீரனாக்கும் கவிதை வரிகளை... எழுதி எழுதிக் குவியுங்கள்! குனிந்து கிடக்கும் விடுதலை உணர்ச்சி, கொடியேந்திக் கிளம்பட்டும்! கூனன் நிமிரட்டும்! குருடன் -
பக்கம்:மணி மகுடம்.pdf/24
Appearance