கலைஞர் மு. கருணாநிதி 17 புது: எல்லாம் முடிந்து விட்டது. கையெழுத்துப் போட வேண்டியதுதான்... பாக்கி.. (அல்லி ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் கையெழுத்துப் போட நீட்டுகிறாள், புதுமைப்பித்தன், பேனாவைக் கையில் வாங்குகிறான். அல்லி: தயவு செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு... புது: என்ன உறுதிமொழி? அல்லி: மணிமகுடபுரியின் மக்கள் நலத்திற்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபடுவேன். புது: மணிமகுடபுரியின் மக்கள் நலத்திற்காகவும் அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபடுவேன். அல்லி: மக்களுக்காக செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும், மக்கள் மன்றத்தின் கட்டளைப்படி செய்வேன். புது: மக்களுக்காக செய்ய வேண்டிய எந்தப் பணிகளையும், மக்கள் மன்றத்தின் கட்டளைப்படி செய்வேன். அல்லி: நாட்டு விடுதலைக்காக, உயிரைத் தரவும் தயங்க மாட்டேன். புது: நாட்டு விடுதலைக்காக, உயிரைத் தரவும் தயங்க மாட்டேன். அல்லி: உம் - கையெழுத்துப் போடுங்கள். புது: உம் - கையெழுத்துப் போடுங்கள். அல்லி: (சிரித்தபடி) இல்லை - கையெழுத்துப் போடுங்கள் என்கிறேன். புது: மன்னிக்கவும் (என்று கூறியபடி கையெழுத்திடுகிறான்)
பக்கம்:மணி மகுடம்.pdf/26
தோற்றம்