உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மணிமகுடம் குண: இரவு அதிக நேரம் விழித்துக் கொண்டிருந்தாளா? எங்கே போனீர்கள்? அரண்மனைக்கா? அரண்மனையில், அரசரைச் சந்தித்தீர்களா? அரசரோடு கலா பேசினாளா? பேசும்போது நீயும் கூட இருந்தாயா? என்ன பேசினார்கள்? திருமண விஷயமாக ஏதாவது அரசர் வாய் திறந்தாரா? கலாராணி அதற்குச் சம்மதம் தெரிவித்தாளா? சம்மதத்தைக் கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைந்தாரா? அரசரும் கலாவும் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்...? வ: உங்களது ஆயிரம் கேள்விகளுக்கு அடியாள் சொல்லும் ஒரே பதில் என்னவென்றால், கலாராணி அரண்மனைக்குப் போகவுமில்லை- அரசரைப் பார்க்கவுமில்லை. குண: என்ன? போகவில்லையா? வஞ்சி - உன்னிடம் எத்தனை தடவை சொல்லிவிட்டேன் - அரசரையும் கலாராணி யையும் சந்திக்க வைத்து, இருவரிடையே காதலை உண்டுபண்ண வேண்டியது உன் கடமை என்று எத்தனை தடவை சொல்லி விட்டேன். வ: பிடிவாதத்திற்கு மருந்து ஏது பிரபு? நான் எவ்வளவுதான் சொன்னாலும், அவள் அரசரைச் சந்திக்க விரும்புவதே இல்லை. குண: வஞ்சி! அரசர் மீது அவளுக்கு எப்படியும் காதல் ஏற்பட வேண்டும். வ: என்ன செய்வது? தங்களுக்கு அரசர் மீது ஏற்படும் காதல் கூட அவளுக்கு ஏற்படவில்லை. குண: எனக்கு அரசர் மீது அல்ல காதல் - மணி மகுடபுரியின் சிம்மாசனத்தின் மீது! அரசர் - கலாராணி திருமணம் நடந்து விட்டால் - என்னுடைய மருமகன் மணிமகுடத்தை ஆளுகிறான் என்பேன்! பிறகு என்னுடைய பேரன் ஆளுகிறான் என்பேன்! மணிமகுடபுரி கொலுமண்டபத்தின் மீது இந்தக் குணசீலரின் குலக் கொடியல்லவா படரும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/29&oldid=1706426" இலிருந்து மீள்விக்கப்பட்டது