உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 21 வ:கவலைப் படாதீர்கள் பிரபு! - அரசனுக்கு நான் எப்படியும் வலை வீசுகிறேன். குண: என்ன நீயா? வ: ஆமாம் - கலாராணி என்ற வலையை வீசுகிறேன். - குண: சபாஷ் வஞ்சி அந்த வேலையை உன்னிடம் ஒப்புவித்து விட்டேன். வெற்றிகரமாகச் செய்! - அரசருக்கும் கலாராணிக்கும் விரைவில் விவாகம் நடைபெற வேண்டும். வ: அதற்கு நான் பொறுப்பு. குண:பேரன் பிறக்க வேண்டும். வ: அதற்கு நான் பொறுப்பல்ல - பேத்தி கூட பிறக்கலாம். (அமைச்சர் அறையை விட்டு சிரித்தபடி போகிறார்) காட்சி 5 (வெற்றிலை, பாக்கு, பத்திரிகை முதலியன விற்கும் கடை. அதன் எதிரே கூட்டமாக நின்று சிலர் சாமான் வாங்குகிறார்கள். ஒருவன் மக்கள் தொண்டன் பத்திரிகையை வாங்கிப் பிரிக்கிறான். பிரித்தவன் ஆச்சரியமுடன்) ஒருவன் : அடடே! ஒரு செய்தி பார்த்தீர்களா? மற்றவன்: என்ன? என்ன?.... ஒருவன்: (படிக்கிறான்) குருநாதர் மடாலயத்துக்கு முன்பு குழப்பம் செய்ய முயற்சி - குதிரைப் படைகள் கலகக்காரர்களை விரட்டியடித்தன. புதுமைப்பித்தன் என்னும் பெயருடைய ஒரு ஆள் மடாலயத்து பூஜைக்காகச் செல்லும் மக்களை வழிமறித்துக் குருநாதரும் நம்மைப்போல ஒரு மனிதர்தானே? அவர் காலில் எதற்காக விழுந்து காணிக்கை செலுத்த வேண்டும்? என்று தெய்வ நிந்தனையாகப் பேசியதின் விளைவாகச் சிறு குழப்பம் ஏற்பட்டது அவனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக மடாலயத்துக்குச் சென்ற மக்கள் தேங்கி நின்றுவிட்டார்கள். அவர்களையெல்லாம் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/30&oldid=1706427" இலிருந்து மீள்விக்கப்பட்டது