உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 31 தாங்கொணாத வேதனைக்காட்சிகளைத் தான் நாம் காண வேண்டும். கொடிக்காலை அழித்துக் கோயில் கட்டுவதும், குடிசைவாழ் தோழர்களின் குரல்வளையை நெறிப்பதும் ஒன்றுதான் - என்பதைக் கோலோச்சும் குணாளர்கள் இப்போதும் மறுப்பார்கள்; இனி எப்போதும் மறுப்பார்கள். அந்தக் கோணங்கிகள் வழிக்கு வர, நமது கண்டனக் கொடி நாடெங்கும் பறக்க வேண்டும். கடல் நீர் பொன்: கொடி பறந்து பயனில்லை. கண்டன முழக்கங்கள் அலைபோல் கொந்தளித்தும் பயனில்லை பயனில்லை - நான் சொல்லுகிறேன்; வேந்தனுக்கு இப்போது ஓலை அனுப்பவேண்டும். "கொடிக்கால் நகரை அழிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திடலாகாது! மீறி கையொப்பமிடுவீரேயானால், உமது உயிருக்கே ஆபத்து நேரிடும்! என்பது போல் எச்சரிக்கை வேண்டும்! க புதுமை: நண்பர் தருவது பலாத்கார மார்க்கம். அமைதியான முறையிலேயே காரியம் சாதிப்பதையே நான் விரும்புகிறேன். பொன்: மயிலைப் போய் இறகு கேட்பது- மத யானையிடம் இதோபதேசம் செய்வது - மலைப்பாம்புக்கு மகுடி ஊதுவது இம் மாதிரி அமைதி இப்போது தேவையில்லை... - புதுமை: மயிலிடம் இறகுப் பிச்சை - மதயானையிடம் உபதேசம் - மலைப்பாம்பிடம் மகுடி - இவைகளை எல்லாம் நான் அமைதி என்று கூறவில்லையே அறிவீனமான செய்கைகளுக்குத்தான் இவைகள் எடுத்துக் காட்டுகள். நான் கூறும் அமைதி அரசியல் நாகரீகத்தைப் பொறுத்தது! அரசியலிலே தலைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்யத்தைப் பொறுத்தது! தங்கள் முடிவுப்படி அரசனின் உயிருக்கு தீங்கு மூட்டி விட்டால், அரசன் கொல்லப்பட்டு விட்டால், நமது எண்ணங்கள் சுலபமாக ஏற்றம் பெற்று விடுமா? அப்போது தான் நம் மார்க்கத்திலே, மலைக்கத்தக்க தடை ஏற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/40&oldid=1706437" இலிருந்து மீள்விக்கப்பட்டது