உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மணிமகுடம் " 'கொள்கைக்கு விரோதமானவர்களையெல்லாம் கொன்று விடும் கோஷ்டியினர்" என்ற பழிச் சொல், நமது தூய்மை சேர் நற்கொள்கைகளை நாட்டிலே பரவ விடாமல் தடுத்து விடும்; நான் கேட்கிறேன் கொல்லப்பட வேண்டியது அரசனா... க.ரோ: இல்லை- அந்தக் குருநாதர்! புதுமை: அவருமல்ல, ஆசிரியர் அரிஹரநாதருமல்ல! அமைச்சர் குணசீலருமில்லை! கொல்லப்பட வேண்டிவை குருட்டு எண்ணங்கள்! இருட்டு நினைவுகள்! புலியைக் கொல்லாவிட்டால், அதன் பாய்ச்சலைத் தடுக்க முடியுமா? பாம்பை அடிக்காவிட்டால், அதன் விஷப்பல்லிலேயிருந்து தப்ப முடியுமா? என்று கேட்பீர்கள்! புலியும் பாம்பும் வாழும் காட்டை, நாட்டுக்கு நடுவிலே வைத்துக் கொண்டு புலி - புலிஎன்று கிலி கொள்வதில்என்ன லாபம்? அதனால், முதலில் அழிக்கப்பட வேண்டியது காடு! இருட்டு உள்ளம்! குருட்டு எண்ணம்! அவை ஒழிக்கப்பட்டால் காடு நாடானால் கவலை தொலையும் - புதர் ஒழிந்தால், புலியும் பாம்பும் ஒழியும்! அந்த நிரந்தரமான நிம்மதிக்குப் போராட வேண்டுமென்பதுதான் என் கொள்கை! - அல்லி: ஆமாம் - அவர் கூறுவது உண்மை! ஒரு அரசனைக் கொன்று விட்டால் நாளை இன்னொரு அரசன் வரப் போகிறான்- அவனையும் கொன்று விட்டால், மறுநாள், மற்றொருவன் வரப் போகிறான். இப்படி நாம் கொலை செய்வதும், புதிய அரசர்கள் வருவதுமாக இருந்தால், கொலைவாளைக் கீழே வைக்க நமக்கும் நேரமிருக்காது; கொலுமண்டபமும் அரசனில்லாமல் காலியாக இருக்காது! பொன்: அப்படியானால் மகுடமே ஆளட்டும்; மக்களாட்சி தேவையில்லை என்கிறீர்களா? புது: இல்லை... இல்லை... ஒரு அரசனை ஒழித்துப் பயனில்லை... அரச பரம்பரையே ஒழிய வேண்டுமென்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/41&oldid=1706438" இலிருந்து மீள்விக்கப்பட்டது