உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மணிமகுடம் மெய்: இதோ, இப்போதே வருவதாகச் சொல்லுகிறார் - தாங்கள் இங்கே அமர வேண்டுகிறேன். (அமைச்சர் உட்கார்கிறார்) மெய்: என்ன புதிய விஷயமோ...? குண: நீ அரசருக்கு மெய்க்காப்பாளன் தானே? மெய்: ஆமாம்... குண: அந்தக் காரியத்தோடு இரு! இதிலெல்லாம் தலையிட்டுக் கொண்டு தவிக்காதே! என்ன விஷயமாக நான் வந்தால் உனக்கென்ன? மெய்: அபச்சாரம், மன்னிக்கவும் - க்ஷமிக்க வேண்டும்! இல்லை... அந்த தேவாலயம் கட்டுவதைப் பற்றி... குண: ஆமாம் - அதைப் பற்றித்தான் - நீயா கட்டப் போகிறாய்... (கோபமாக) மெய்: அய்யோ நானா! அதெல்லாம் கட்டுவதற்கு கொத்தனார்கள் இருக்கிறார்கள்; குடியேற குருநாதர்கள் இருக்கிறார்கள்! குடியேற குண: ஏய் உலகப்பா! நீ வரவர தலைகீழாய்த்தான் நிற்கிறாய்...மரியாதையாக இரு மெய்: அய்யோ - நான் தலைகீழாய் நிற்பதே இல்லிங்க பிரபு; சிரசாசனம் செய்கிற நேரத்தைத்தவிர! குண: மரியாதையாக இரு! மெய்: மண்டியிட்டு, அனுமார் போலவா? (அதுபோல பாவனை செய்கிறான்) குண: மன்னரிடம் பணி செய்கிறோம் என்ற மமதை - இரு ரு! அவரிடமே கூறி உனக்கு சரியான...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/45&oldid=1706442" இலிருந்து மீள்விக்கப்பட்டது