கலைஞர் மு. கருணாநிதி 37 மெய்: வேண்டாம் வேண்டாம்.. பிரபூ! என்னை மன்னித்து ஆட்கொள்ளுங்கள்.... ஏதோ கிறுக்குத்தனமாக சொல்லி விட்டேன். அரசருக்கு இதுமாதிரி நான் செய்யும் வேடிக்கையெல்லாம் மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கும் ஏதோ பிடித்திருக்கிறது என்று நினைத்து.,.. குண: எனக்கென்னடா பிடித்திருக்கிறது பேயா? பிசாசா? மெய்: இல்லீங்க.. நான் எது சொன்னாலும் தப்பு எடுக்கிறீங்களே; என்னை மன்னித்து விடுங்க பிரபு! என் வேலைக்கு வெடி வைத்து விடாதீர்கள் சாமி! அபச்சாரம்! அபச்சாரம்... அடியேன் சிறியேன் - இனி பிழை புரியேன்! கன்னத்தில்போட்டுக் கொள்கிறான்) குண: உன்னை மன்னிக்கிறேன். போய்த் தொலை! இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே! போய்ப் பார் அரசர் வருகிறாரா என்று! மெய்: உத்திரவுங்க... d) (என்று தனக்குள்ளாகவே அமைச்சரை கிண்டல் செய்து கொண்டே, உள்ளே போகிறான். அமைச்சர் காத்திருக்கிறார். மெய்க்காப்பாளன் வந்து) மெய்: பிரபூ! அரசர் வருகிறார்! (அமைச்சர் எழுந்து நிற்கிறார். அரசன் வருகிறான். அழகான அரும்பு மீசையும், கம்பீரமான உருவமும் கொண்ட அரசன் மணிமாறன். ஏறத்தாழ புதுமைப் பித்தனின் சாயல் பொருந்தியவனாகவே இருக்கிறான். பெருமிதத்தோடு நடந்து வரும் அரசனை அமைச்சர் வணங்குகிறார். அரசனும் வணங்கி விட்டு, ஆசனத்தில் அமருகிறான்) அரசன்: குணசீலரே! என்ன விசேஷம்? எல்லாரும் நலம்தானே? கலாராணி சௌக்கியமா? குண: சௌக்கியந்தான் அரசே! தங்களைப் பார்க்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டேயிருந்தாள்.
பக்கம்:மணி மகுடம்.pdf/46
Appearance