உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மணிமகுடம் அர: அப்படியா? ம்! ராஜரீகங்கள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது... சீமான்கள் சபையில் ஏதாவது புதிய தீர்மானங்கள் உண்டா..? குண: உண்டு! அதில் கையெழுத்து பெறுவதற்காகத்தான் வந்தேன்! அர: என்ன தீர்மானம்? குண: தேவாலயம் ஒன்று கட்டுவதற்காக... அர: கட்டவேண்டியதுதான்! சிலாக்கியமான காரியம்... மக்களுக்கு உடனடியாக தேவை தேவாலயம்தான்! இந்த திவ்யமான யோசனைக்கு சொந்தக்காரர் யார்? குண: குருநாதர்தான்! அர: அதுதானே பார்த்தேன்; வேறு யாரும் ஆண்டவனுக்குத் தேவையான அவசிய விஷயங்களை உணர முடியாதே - சபாஷ்! தேவாலயம் கட்டுவதென்றால், திரவியம் அதிகம் வேண்டுமே! குண: பொக்கிஷத்திலே கொஞ்சமிருக்கிறது; போதா விட்டால், தேவாலய வரி ஒன்று விதிக்கவும் உத்தேசம்! க அர: உத்தமம்!.. அமைச்சரே!... ஏதோ ஒரு ஆற்றில் அணைக்கட்டு இல்லாத காரணத்தால் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு, ஜனங்களுக்கும், கிராமங்களுக்கும் சேதம் ஏற்படுவதாகச் சொல்லப்பட்டதே, அது கவனிக்கப்பட்டு விட்டதா? குண: இல்லை. க்கு அர: ஆமாம், அது இப்போது அவசரமில்லை - தேவாலயம் கட்டி, ஆண்டவனைத் திருப்திப் படுத்தினால் அவரே கூட வெள்ளத்தைத் தடுத்து, ஆற்றையும் வற்ற வைத்துவிடுவார்! சரி.. அமைச்சரே! தேவாலயம் எந்த இடத்திலே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/47&oldid=1706444" இலிருந்து மீள்விக்கப்பட்டது