பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 99 என்று தன் தலைவனைச் சேடன் புகழ்கிறான். ஒருநாள் இரவில் நெடுநேரத்திற்குப் பிறகு சாருதத்தன், வீடு திரும்புகிறான். அப்போது அவன் கால்களைக் கழுவுவதற்கு நீர் கொணர 'இரதணிகையை அழை' என்று சேடனிடம் விதுாடகன் கட்டளையிடுகிறான். உடனே 'உறங்குகின்றவளை எழுப்ப வேண்டா (ll) என்கிறான் சாருதத்த்ன். எவ்வளவு பெரிய உள்ளம். "மலர்ந்த மாதவிக் கொடியையும் வளைத்து மலர் பறிப்பின் அங்ங்னம் வளைத்தலால் ஒர் அமயம் அதன் தளிர் உதிர்ந்து விடுமோ என்னும் ஐயத்தால் அக்காரியத்தைச் செய்வதற்கும் மனம் ஒருப்படாத'வன் (IX) அவன் என்கிறான் மைத்திரேயன்! எவ்வளவு பெரிய உள்ளம்! இவ்வளவு பெரிய உள்ளம் படைத்த-பண்பாடும் ஒழுக்கமும் படைத்த-சாருதத்தனைச் சகாரனைத் தவிர இந்நாடகத்தில் வரும் எல்லாரும் 'மாட்சிமிக்க சாருதத்தன்' என்று பண்பாடும்போது மகிழ்கிறோம். நாடகத்தின் இறுதியில் சகாரனும் அங்ங்னம் அழைக் கின்றான். ஒருவேளை 'சகாரனையும் அப்படி அழைக்க வைப்பேன் என்று சாருதத்தன் உள்ளத்துள் சபதம் செய்து கொண்டானோ, என்னவோ சகாரனைக் 'கொன்றுவிட வேண்டுமா?' என்று கேட்கும் சருவிலகனிடம் 'இல்லை. இல்லை. விடவேண்டும்' என்று சாருதத்தன் கூறுகிறான். இப்போது அவன் உள்ளம் பெரிய உள்ளம் இல்லை; பெரிதினும் பெரிய உள்ளம் தன்வாழ்வுக்கு நஞ்சு வைத்த கயவனைச் சாருதத்தன் மன்னிக்கிறான்; மறக்கிறான். இப்படிச் செய்ய வேறு யாரால் இயலும்? இத்தகைய சாருதத்தனைச் சில திறனாய்வாளர்கள் 'நாடகத்தலைவன் என்று ஏற்க மறுப்பதை இங்கே நாம் நினைவு கூரவேண்டும். தெய்வம், விதி, நிமித்தம்