பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மண்ணியல் சிறுதேர் மற்றொருவனாயிருந்தால் - ஏன் விதூடகனாயிருந்தால் தன்னிடம் வசந்தசேனை அடைக்கலமளித்த அணிகலன் களவுபோனபோது 'கொடுத்தவன் யார்? வாங்கினவன் யார்? சான்று யார்? (III) என்று மறுத்துவிடுவான். சாருதத்தனால் பொய்யுரைக்க முடியவில்லை. பழிக்கு அஞ்சுகிறான்; தன்னைச் 'சூதனாக்கிக் கொண்டு தன் மனைவியின் இரத்தினமாலையை வசந்தசேனைக்குக் கொடுத்தனுப்புகிறான். 'மலரின்றி வறிதிருக்கும் மாமரத்தினின்றும் தேன்துளிகள் எங்ங்னம் வீழும் (IV) என்று வசந்தசேனை தனக்குள் வியந்து சாருதத்தனின் பெருந்தன்மையைப் போற்றுகிறாள். "இதனாலேயே விருப்பஞ் செய்கின்றேன்” என்று நெஞ்சம் நெகிழ்ந்து ரைக்கிறாள். வசந்தசேனையின் தோழி மதனிகையும் சாருதத்தனின் பெருந்தன்மையை அறிந்து வைத்திருக் கிறாள். திருடிவந்த பொருளைச் சாருதத்தனிடம் திரும்பக் கொடுத்தால் அவன் தன்னை நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்துவிடுவானே என்று கூறும் சருவிலகனிடம் "திங்களஞ் செல்வனிடத்திலிருந்து வெயில் தோன்றுமா?" என்கிறாள். சாருதத்தனிடம் மதனிகைக்கு அவ்வளவு நம்பிக்கை. சாருதத்தன், தன்னை நம்பித் தன் வண்டியில் ஏறிவந்த ஆரியகனைக் காப்பாற்றுகிறான். இறுதிவரை ஆரியகன் தன்னிடத்தில் வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறான். சாருதத்தன் தன்பால் பணியாற்றும் ஏவலர்களைக்கூட அன்பால் கவரும் ஆற்றல் மிக்கவன். "தூய சீலமும் தொண்டு செய்வோரிடத்து அருளும் மேயநாயகன்பொருளில்ன் என்னினும் மேலோன்' (III)