உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 97 மாட்சிமிக்க சாருதத்தருடைய குணங்களுக்குத் தோற்று ஈடுபட்ட பணிப்பெண் ஆவேன் என்கிறாள். சாருதத்தன் ஏழையல்லன்; பண்புச்செல்வங்களின் ஒரே அதிபதி என்று எண்ணுகிறாள். அவள் எண்ணம் சரிதானே? சாருதத்தனது பெயரைச் சொல்லிய அளவில் சம்வாகக னுக்கு வசந்தசேனை பெருமதிப்புக் கொடுக்கிறாள். ஏன்? சாருதத்தன் வண்டி என்றதும் பார்க்கப்படாமலே செல்ல அனுமதிக்கிறான் சந்தனகன். ஏன்? சாருதத்தனை வரவேற்று நீதிமன்றத்தில் இருக்கை அளிக்கிறார் நீதிபதி. ஏன்? சாருதத்தன் கொலைக்களப்படப் போகிறான் என்றறிந்தபோது ஊரார் கண்ணிர் மழை பொழிகிறார்கள். ஏன்? எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் அவன் குணம்தான். தனம் இல்லாவிட்டாலும் சாருதத்தனிடம் குணம் என்னும் சந்தனம் இருக்கிறதே! அதுபோதுமே 'அவர் உயர் குணங்களால் உச்சியினி நகரம் அலங்கரிக்கப்பட வில்லையா?" () என்று மைத்திரேயன் சகாரனிடத்தில் கேட்கிறானே, அது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. சாருதத்தன் தன்னிடத்தில் இருந்த செல்வத்தையெல்லாம் இரப்போர்க்கு ஈத்து வந்ததால், ஈத்து உவந்ததால் ஏழையாயிருக்கிறான். புதிய மாளிகைகள், பண்ட சாலைகள், மடங்கள், உய்யானங்கள், திருக்கோயில்கள், ஊருணி கிணறுகள் என்னும் இவற்றால் உச்சயினியை அலங்கரித்ததால் (IX) இப்போது அவன் வறியவனா யிருக்கிறான். எனவேதான் அவனைக் 'கற்பகத்தரு' என்றும் அவன் 'ஒருவனே உலகில் உயிருடன் என்றும் மருவிச் சிறந்து வாழ்வோன்' என்றும் சகாரனின் விடனே மெய்ம்மறந்து பாராட்டுகிறான். - - சாருதத்தனிடம் உருண்டோடிடும் நாணயம் இல்லை; ஆனால் நல்லவர் போற்றும் நாணயம் நிரம்ப இருக்கிறது.