பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மண்ணியல் சிறுதேர் வாழ்தல் வேண்டும் என்பது சாருதத்தன் எண்ணம். 'இரேபிலன் பாடிய இசையைச் சுவைத்து நடுநிசிக்குப் பிறகு வீடு திரும்ப வேண்டுமானால் அவனுக்கு எத்துணைக் கலையார்வம் இருந்திருக்கவேண்டும்? மத்தளம், முரசு, படகம், யாழ், குழல் முதலிய கலைக் கருவிகள் அவன் இல்லத்தில் நிறைந்திருக்கக் காணும் சருவிலகன் 'இது நாட்டிய ஆசிரியரின் இல்லமோ?" என்கிறான். 'அழகிய(து) ஒவ்வொன்றும் - எனக்(கு) ஆனந்தம் என்றென்றும்" என்ற கவிஞன் உள்ளம் சாருதத்தன் உள்ளம். மேகம், மின்னல், மழை ஆகியவற்றைக் கண்டு பாடும்போதும், நஞ்சினுங் கொடிய வறுமையைப் பற்றி அமுத மயமாக வருணிக்கும்போதும் சாருதத்தன் ஒரு கவிஞனாகவே மாறிவிடுகிறான். இங்ங்னம் அழகை வழிபடும் கவிஞனாகிய சாருதத்தன் ஊருக்கே அழகியான வசந்த சேனையிடம் மனம் பறிகொடுப்பதில் வியப்பில்லை யல்லவா? சாருதத்தன், கேவலம் - புற அழகு மட்டும் உடையவன் அல்லன்; புற அழகை மட்டும் மதிப்பவன் அல்லன். அக அழகுமிக்கவன்; அதை மதிப்பவன். 'சீலமும் தூய தேகமும் படைத்த செங்கமல'மாய் வசந்தசேனையின் இதயப் பொய்கையில் அவன் விளங்குகிறான். அவன், சகாரனைப்போல் பகட்டுக்காட்டி வசந்த சேனையைப் பெற விரும்பவில்லை; விரும்பவும் முடியாது. "குணங் களாற் பெறற்பாலளே' என்று நம்புகிறான். அவன் - நம்பிக்கை பொய்க்கவில்லை. வசந்தசேனை 'யான்

  • A thing of beauty is a joy for ever - Keats.