பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னன் சூத்திரகனால் இயற்றப்பட்டு, முதுபெரும் புலவர் பண்டிதமணியாரால் மொழிபெயர்க்கப்பட்ட மண்ணியல் சிறுதேர் என்னும் நாடகம், இந்தியப் பெருநிலத்தில் இயற்றப்பட்ட எல்லா நாடகங்களுக்கும் மணிமுடியாகத் திகழ்கின்றது. காலத்தை மீறிய கருத்துக்களை பிறர் வாய் திறக்க அஞ்சுகின்ற சமூக அவலங்களை பயனற்ற பழைமைகளை அழித்து உரமாக்கிப் புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கான வழிகளை வாய்ப்புகளைச் சூத்திரகன் நாடகத்தில் வடித்துக்காட்டியதுபோல வேறு யாரும் காட்டியதில்லை. காளிதாசன் போன்ற திறமான புலமையாளர்கள் உண்டுதான் என்றாலும் அவர்கள் எல்லாம் மன்னர் குடும்பத்தின் மகாத்மியங்களை - மகேசுவரனின் லீலா விநோதங்களை நாடகமாக்கினார்களேயன்றிச் சராசரி மக்களின் உணர்வுகளை அவர்களுக்கிருந்த சங்கடங்களை சூத்திரகனைப் போல எடுத்துக்காட்டியவர்கள் இல்லை. அப்படி என்னதான் சூத்திரகன் சொல்லிவிட்டான் 1. மக்களைச் சுமக்காமல் மக்களுக்குச் சுமையாக இருக்கின்ற அரசுகள் (பாலகனின் அரசு) அடியோடு ஒழிக்கப்படல் வேண்டும். . - 2. ஆற்றல்மிக்க்வர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் படுகின்றபொழுது அவர்கள் தீயவர்களாகி (சருவிலகன் சம்வாககன் போன்றோர்) விடுகின்றனர். இவர்கள் இனம் காணப்பட்டு நெறிப்படுத்தப்பட்டால் புரட்சியைக்கூட முன்னின்று நடத்தி நல்லதோர் அரசை நாட்டிலே நிறுவுவார்கள். - 3. குலம் என்பதும் குடி என்பதும் சமூகத்தினால், வருவதேயன்றிப் பிறப்பினால் வருவதன்று; ஒழுக்கம் மிக்க வசந்த சேனை போன்றவர்கள் கணிகையர் §