அணிந்துரை பாவலர் மணி புலவர் ஆ. பழனி சிறந்த படைப்பாளிகள் பெரும்பாலும் உயர்ந்த திறனாளிகளாக இருப்பதில்லை. உயர்ந்த திறனாளிகள் சிறந்த படைப்பாளிகளாக இருப்பதில்லை. விதிவிலக்காக ஒரிருவர்தாம் சிறந்த படைப்பாளியாகவும் உயர்ந்த திறனாளியாகவும் விளங்குகின்றனர். 'மண்ணியல் சிறுதேர் - ஒரு மதிப்பீடு என்னும் நூல் என்ன செய்கிறது? கவிஞர் மீரா என்னும் படைப்பாளிக்குள் ஒர் அருமையான திறனாளி வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை வெளிப்படுத்திக் க்ாட்டுகின்றது. தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம் என்ற கவிதை அடியில் மீராவைக் கண்டெடுத்து நாட்டுக்கு அறிமுகம் செய்தார் பேரறிஞர் அண்ணா. இது நடந்து நாற்பத்தைந்து ஆண்டுகளாகிவிட்டன. அண்ணாவின் கண்டெடுப்பு சுழாங்கல் இல்லை; வைரக்கல்தான் என்பதைத் தன் பட்டை தீட்டப்பட்ட பன்னூறு பாடல்களால் நிறுவியவர், கவிஞர் மீரா. அந்த மீராதான் இந்த நூலில் தான் ஓர் ஒப்பற்ற திறனாளி என்பதை மெய்ப்பிக்கின்றார். - -
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/10
Appearance