பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 12I சண்டையிடும்போது அவன் கையிலிருக்கும் அணி கலன்கள் கீழே வீழ்கின்றன. அவற்றைக் கண்ட நீதிபதி சாருதத்தனைக் குற்றவாளி என்று முடிவுகட்டுகிறார்; அணிகலன்களுக்காகத்தான் சாருதத்தன், வசந்த சேனையைக் கொன்றான் என்று நம்புகிறார். இப்படி நாடக ஒட்டத்திற்குத் துணை நிற்கும் முக்கிய உறுப்பினனாக மைத்திரேயனை ஆசிரியர் படைத்துள்ளார். 'ஹாம்லெட் நாடகத்தில் வரும் ஹொரேசியோ (Horatio) என்பவன் ஹாம்லெட்டின் உயிருக்குயிரான நண்பன் என்பதை அந்நாடகத்தின் இறுதிக் காட்சியில் சேக்ஸ்பியர் அருமையாகச் சித்திரித்துள்ளார். ஹர்ம்லெட் மடியுந்தருவாயில், தன் நண்பனிடம் விடைபெறுகிறான்; அவன் உயிர்வாழ்வான் என்று நம்புகிறான். அப்போது ஹொரேசியோ, 'அந்த நம்பிக்கை வேண்டாம். நான் தற்கொலை செய்துகொள்ளத் தயங்கேன்; இவ்விதத்தில் நான் ஒரு டேனன் என்பதைவிட் ஓர் உரோமன். இதோ, கோப்பையில் இன்னும் கொஞ்சம் நஞ்சிருக்கிறது...... உங்களைப் பின்தொடர்வேன்' என்கிறான். ஹொரேசி யோவைப் போன்ற உண்மை நண்பன்தான் மைத்தி ரேயனும். சாருதத்தன் கொலைக்களபடப் போகுங்கால் மைத்திரேயன்துடிக்கிறான். உரோகசேனனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போ என்று வேண்டும் சாருதத்த னிடம் "தங்களைப் பிரிந்து யான் உயிர்தாங்கி வாழ்வேன் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா' என்று மைத்தி ரேயன் கேட்கிறான். பின்னர், தனக்குள் 'பார்ப்பனியின்

  • Horatio: Never believe it. I am more an antique Roman

than a Dane; Here's yet some liquor left. - Shakespeare, Hamlet, Act.V.Sc.II.