jo - மண்ணியல் சிறுதேர் பால் குழந்தையைக் கொடுத்துவிட்டு யான் உயிர் நீங்கி என் அன்புமிக்க நண்பரைப் பின்தொடர்வேன்' என்கிறான். இத்தகைய மைத்திரேயனைச் சாருதத்தன்'மூர்க்கன், அறிவில்லாதவன் என்று வேடிக்கையாகக்கூட சொல்லி யிருப்பானா? நாமறியச் சாருதத்தன், 'நேசமார் மைத்தி ரேயன்' எக்காலத்தும் இனிய நண்பன்' என்றல்லவா அவனைப் பாராட்டுகிறான். V தூதை "வாழ்க்கைப் பாதையில் நெடுந்தூரம் நடந்துள்ளேன்; ஆண்டுகள் பலவற்றைக் கடந்துள்ளேன்; எனினும் தளர்ச்சியில்லை; தலையில் நரையில்லை. அதற்குரிய முதற் காரணம் என் துணைவி மாட்சிமிக்கவள்...' என்கிறார் ஒரு தமிழ்ப் புலவர். அந்த்மிழ்ப் புலவருக்கு வாய்த்த மனைவியைப் போல் சாருதத்தனுக்கு வாய்த்த மனைவி தூதையும் மாட்சி மிக்கவள். "ஏற்றவளம் ஒர்ந்தொழுகும் இல்லுடையேன்” (III) என்று சாருதத்தன் பெருமைப்படும் விதத்தில் 'சீலமுயர் கற்புடைய சேயிழையாகவிளங்குகிறாள்தூதை, தன் அன்புக்கணவன் சமுதாய வீதியில் ஏறுபோல் பீடு நடை"யிடவேண்டும் என்று எண்ணுகிறாள். அதனால்தான் களவுபோன சிறுவிலையுள்ள வசந்தசேனையின் அணி கலனுக்குப் பதிலாகக் கடல் வலயத்திற் சிறந்த இரத்தின மாலையை மைத்திரேயன் மூலம் கொடுத்தனுப்புகிறாள். 'பின்னால் உதவும், நகையிருந்தால் உதவும் என்று எண்ணாமல் தன் கணவனுக்குக் களங்கம் வரும் முன்னால்
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/123
Appearance