பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 123 உதவுகிறாள். பெருவள்ளலாகிய தன் கணவனிடம் இச்சிறு கொடையைத் தெரிவித்தல் தனக்கு நாணம் தரும் என்று கருதி மைத்திரேயனிடம் "என்னை நாணமுடையவளாகச் செய்தல் வேண்டா (III) என்று வேண்டுகிறாள். எவ்வளவு பணிவு எவ்வளவு பெருந்தன்மை! வசந்தசேனை இரத்தினமாலையைத் திரும்பக் கொடுக்குங்கால் ஏற்க மறுக்கிறாள். தன் கணவன் பரிசாகத் தந்த பொருளைப் பெற்றுக்கொள்ளுதல் தகுதியன்று எனக் கருதுகிறாள். அத்தோடு 'எம்பெருமானே எனக்குச் சிறந்த அணிகலனாவர்' என்றுரைக்கிறாள். தூதையின் தூய உள்ளத்தைப் புரிந்துக்கொண்ட வசந்தசேனை அவளுக்கும் பணிப்பெண் ஆவதில் வியப்பில்லையல்லவா? தன் கணவனை, இன்னொருத்தி விரும்புகிறாள் என்று தெரிந்த மாத்திரத்தில் எந்தப் பெண்ணும் மனம் கொதிப்பாள். தூதையோ, தன் கணவன் இன்பமே தன் இன்பம் என்று கருதுகிறாள். தன் இல்லத்தில் வசந்தசேனை நுழைவதை அனுமதிக்கிறாள். தன் உரிமையில் பாதியை அவளுக்கு வழங்க முன்வருகிறாள். நாடகத்தின் இறுதியில் உயிர் பிழைத்து வரும் வசந்த சேனையைத் தழுவியவாறு'தெய்வ வயத்தால் உடன்பிறந்தாள் நலமுடையள்ஆயினாள்' என்கிறாள். எவ்வளவு மகிழ்ச்சி! சாருதத்தன் கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப் படும் செய்தியைக் கேட்டவுடன் தன் ஒரே மைந்தனின் எதிர்காலத்தைப் பற்றிக் கூடக் கவலைப்படாது தீப்புக முயல்கிறாள்துதை. ஊரார் எல்லாரும் கண்ணிரில் மூழ்கத் துதை நெருப்பில் மூழ்கப் போகிறாள். இன்னும் சாருதத்தன் இறக்கவில்லை; அதற்குமுன் அவள் உயிரை விட முயல்வதேன்? தன் கணவன் மடிந்த செய்தியைச் செவியால் கேட்கக்கூடாது என்று அவள் எண்ணுகிறாள்.