124 மண்ணியல் சிறுதேர் 'பார்ப்பனியாகிய தங்களுக்குத் தலைவனோடன்றி வேறாகச் சிதைக்கண் ஏறல் பாவமாகும்... ' என்று மைத்திரேயன் கூறும்போது 'இங்குப் பாவ காரியம் விரும்பத்தக்கதாகும். எம்பெருமானுக்கு நேரும் அமங்கலத்தைக் கேட்டல் விரும்பத்தக்கதன்று' (X) என்று பதிலுரைக்கிறாள். அவள் நெருப்பின் எதிர்முகமாகச் செல்லும் வேளையில் தன் கணவனின் ஆசை முகத்தைக் கண்டு களிக்கிறாள். அப்போது சாருதத்தன், தான் உயிரோடிருக்கும்போது அவள் தீப்புக நினைத்ததைச் சுட்டி - 'உண்ணிர் நிறைகமல ஒடைமகள் கண்மூடல் விண்ணிற் கதிர்மறையா வேலைதனிற் கூடுங்கொல்?" स्छ- (X) என்று கேட்கிறான். உடனே 'அதனாலேதான் அத்தாமரை யோடை அறிவில்லாதது என்று கூறப்படுகின்றது'(X) என்றுரைக்கிறாள். இவ்வளவு அறிவுள்ள, பண்புள்ள மனைவியைப் பெற்ற சாருதத்தன் உண்மையில் கொடுத்து வைத்தவன் தான்! VI ஆரியகன் துதிக்கை போன்ற கைகள், சிங்கத்தின் தோள்களைப் போன்ற பருத்துயர்ந்த தோள்கள், முறைப்படி அகன்ற மார்பு, நீண்டு சிவந்த விழிகள் - இவை அரசிலக்கண முடையார்க்கு உரியவை; இவை ஆரியகனிடம் பொருந்தி யிருக்கக் கண்டு அவனை அரசிலக்கணமுடையவன் என்று
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/125
Appearance