உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 மண்ணியல் சிறுதேர் மதிநுட்பத்தை வியந்து 'நன்கு அறிந்தனை. பிறர் உள்ளத்தை அறிவதிற் பண்டிதையாகிய மதனிகையன்றே நீ என்று வசந்தசேனை பாராட்டுகிறாள். வறியவனாகிய சாருதத்தனைக் கணிகையர் குலத்தைச் சார்ந்த வசந்த சேனை விரும்ப முடியுமா? அது, இயற்கைக்கு முரண் அல்லவா? என்று எண்ணுகிறாள். தன் எண்ணத்தை 'மலர்கள் உதிர்ந்த மாமரம் உயர்ந்த சாதியாயினும், அதனை வண்டுகள் எப்படி விரும்பும்?' என்று அழகாகப் புலப்படுத்துகிறாள். சாருதத்தனிடம், திருடிய அணிகலன் களைத் திருப்பிக் கொடுத்தால் தன்னை நீதிமன்றத்தில் நிறுத்துவானோ என்று தன் காதலன் சருவிலகன் ஐயப்படும்போது "திங்களஞ் செல்வனிடத்திலிருந்து வெயில் தோன்றுமா?’ என்று இனிதாகக் கேட்கிறாள். பின்னர், சாருதத்தனது தூதனாய்ச் சென்று வசந்த சேனையின்பால் அணிகலன்களைக் கொடுக்குமாறு சருவிலகனிடம் கூறுகிறாள். அவன் இங்ங்னம் செய்யின் என்னாகும்?" என்று கேட்க "நீயோ கள்வனாகமாட்டாய். அப்பெருமானும் கடனில்லாதவர் ஆவர். பெரு மாட்டிக்கும் தன் அணிகலன்கள் தன்பால் வந்தனவாகும்' என்று பதிலுரைக்கிறாள்; ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க வழி சொல்லுகிறாள், அம்மாங்கனிக் கன்னத்தாள் மதனிகை, நல்லவர்களை மதிக்கிறாள். சாருதத்தனைத் திங்களஞ் செல்வன் என்று பாராட்டுகிறாள். அவன் வீட்டில் சருவிலகன் திருடியதற்காக வருந்துகிறாள். தன் தலைவி வசந்தசேனையிடம் பேரன்பு கொண்டிருக்கிறாள். அவளை விட்டுப் பிரியும் வேளையில் அவள் அடிக்கண் வீழ்கிறாள்; மணிக்கண் இரண்டால் முத்துக்களைச் சிந்துகிறாள். காணும் உருக்கொள் இரதியை ஒப்பக் கவினும் மதனிகையைக் கைப்பிடித்துச் சருவிலகன் வண்டியில் ஏற முயல்கிறான். வாழ்க்கைச் சக்கரம் சுழலப்