பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - #3? போகிறது என்று எண்ணுகிறோம். அதற்குள் ஆரியகன் சிறைப்பட்ட செய்தியறிந்து அவன் வீர முழக்கமிட்டுப் புறப்படுகிறான். இன்னும் அறுபது நாள் ஆகவில்லை; முப்பது நாள் முடியவில்லை; ஒருநாள் கூட முடியவில்லை; தன் காதலனோடு கூடவில்லை; கொஞ்சவில்லை. இந்த நிலையில் வேறொரு பெண்ணாயிருந்தால் கண்ணிர்க் கவிதை பாடியிருப்பாள். போகாதே போகாதே என் கனவா என்று தடுத்திருப்பாள். மதணிகையோ, தன் காதலனின் கடமைக்கு வேலி போடாமல் 'என்னை இருமுதுகுரவர் பக்கலிற் சேர்ப்பித்தல் மாத்திரம் செய்தல் வேண்டும்" என்கிறாள். இறுதியாக அவனிடம் விடைபெறும்போது 'எம்பெருமான் விழிப்புடையராக இருத்தல் வேண்டும்' என்று அம்மான்கூறக்கேட்கிறோம். சருவிலகன் ஒரு நல்ல காதலியைப் பெற்றுவிட்டான்; வசந்தசேனை ஒரு நல்ல தோழியை இழந்துவிட்டாள் IX சம்வாககன் தங்குதற்குரிய மரங்கள் அசைவுற்றால் பறவைகள் என்ன செய்யும்? அங்கும் இங்கும் அலையும்; சுற்றித் திரியும். அத்தகைய மரங்களுள் ஒரு மரம் சாருதத்தன்; அத்தகைய பறவைகளுள் ஒரு பறவை சம்வாககன். பாடலிபுத்திரத்தில் கிராமத் தலைவன் மகனாகப் பிறந்து, உச்சயினிநகரத்திற்கு வந்து, சாருதத்தனிடம் உடம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த சம்வாககன், சாருதத்தன் வறியவன் ஆனதால் வேறு வழியில்லாமல்