பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 139 ii (அ) சிறுபொருள்கள் 'சிற்றுளி மலையைப் பிளக்கும் என்பதையறிந்த சூத்திரகன் தம் நாடகத்தின் பெருநிகழ்ச்சிகளுக்குக் காரண மாகச் சிறுபொருள்களைப் படைத்துள்ளார். மேலாடை, இரத்தினமாலை, வசந்தசேனையின் அணிகலன்கள் ஆகிய வற்றிற்கு முக்கிய இடமளித்துள்ளார். தொடக்கத்தில், இவை சாருதத்தன் - வசந்த சேனை காதலை வளர்க்கப் பயன்படுகின்றன. ஆறாம் அங்கத்திற்குப் பிறகு வசந்த சேனையின் அணிகலன்கள் தீவினைக்குத் துணை நிற்கின்றன. நல்ல நோக்கோடு வசந்தசேனை உரோக சேனனின் மண்வண்டியில் வைத்த அணிகலன்கள் வழக்கு டமன்றத்தில் சாருதத்தனுக்கு மரண தண்டனையை வாங்கித் தருகின்றன. - இதை வைத்துத்தான் 'மிருச்சகடிகம் என்று தம் நூலுக்குப் பெயரிட்டுள்ளார் சூத்திரகன். மூல நூலாசிரி யனைப் போல் சாருதத்தம்’ என்று தம் நூலுக்குப் பெயரிடாமல் புதுமை மணங்கமழப் பெயரிட்ட சூத்திரகனின் கலைத்திறன் பாராட்டத்தக்கது. கண்ணகி கதையில் காற்சிலம்பும் காளிதாசனின் சாகுந்தலத்தில் விரலணியும் (கணையாழி) ஒதெல்லோ நாடகத்தில் கைத்துண்டும் பெற்ற இடத்தை மண்ணியல் சிறுதேரில் அணிகலன்கள் பெற்றுள்ளன. - (ஆ) அறன் வலியுறுத்தல் நாடகங்களும் அறநெறிச் சாரங்களாகலாம்: அறத்தை வலியுறுத்தலாம். சம்வாககனும் சருவிலகனும் நாடகத்