பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - மண்ணியல் சிறுதேர் தொடக்கத்தில் சூதனாகவும் கள்வனாகவும் தோன்று கிறார்கள். பின்னர், அவர்கள், தாங்கள் மேற்கொண்ட சிறிய செய்கைக்கு வருந்துவதாகவும் திருந்துவதாகவும் ஆசிரியர் காட்டுகிறார். அவர்கள் மூலம் அறத்தை உணர்த்துகிறார். சம்வாககன் துறவியாகி 'அறத்தைக் கடைப்பிடித்துச் செய்மின்கள் (VIII) என்கிறான். அவன் வாக்கைச் சூத்திரகன் உலகுக்குணர்த்தும் நல்வாக்காகக் கூடக் கொள்ளலாம். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்' என்னும் தமிழ்த் தத்துவம் இந்நாடகத்திலும் காணப்படுகிறது. சகாரன் மன்னிக்கப்படுகிறான். அதே நேரத்தில் அரசன் பாலகன் தண்டிக்கப்படுகிறான். அரசியல் பிழைத்த வனுக்கு அறம் கூற்றாகிறது. நச்சு மரத்தின் வேரை வெட்டி எறிந்துவிட்டால் அதன் கிளை என்ன செய்யமுடியும்? எனவே கொடிய பாலகன் மடிவதாகவும் சகாரன் மன்னிக்கப்படுவதாகவும் சூத்திரகன் காட்டுகிறார். தீவினையாளர்கள் எல்லாம் தண்டனை பெறுமாறு பல நாடகங்களைப் படைத்தார் சேக்ஸ்பியர். தம்முடைய புயல் போன்ற இறுதிக்கால நாடகங்களில் தீவினை யாளர்கள், திருந்தி மன்னிப்புப் பெறுவதாகக் காட்டுகிறார். 'புயல் நாடகத்தில் வரும் பிராஸ்பெரோ என்பவன் தனக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னிக்கிறான்; பழி வாங்கும் உணர்வை ஒதுக்கித் 'தீமை செய்தோரை ஒறுப்பதினும் பொறுப்பதே சான்றாண்மை" என்கிறான்." இப்படி சேக்ஸ்பியரின் இருவேறு நெறிகளையும் தம் ஒரே நாடகத்தில் சூத்திரகன் காட்டுகிறார்.

  • Yet with my nobler reason' gainst my fury

Do I take part; the rarer action is In virtue than in vengeance... - Shakespeare, The Tempest, Act V, Sc.I.