பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வாளர் தோற்றந்தான் தெரிகிறதேயன்றிக் கவிஞரின் தோற்றம் தெரிவதில்லை. என்ன காரணம்? ஒவ்வொருவருள்ளும் பலமுகங்கள் இருக்கின்றன. ஒரு முகத்திற்கு வாய்ப்பும் வசதியும் கிடைக்கின்ற பொழுது அம்முகம் ஓங்கி உயர்ந்து, வானளாவித் தோன்ற முனைந்து தன் கையை வலுவாக ஊன்றி எழுகின்றது. அக்கை எங்கே ஊன்றப்படுகிறது தெரியுமா? பக்கத்தில் உள்ள இன்னொரு முகத்தின் தலையிலேதான் அக்கை ஊன்றி அழுத்துகிறது. ஒரு முகம் வானத்தை அளாவிக் கொண்டிருக்கின்றபோதே மற்றொரு முகம் வாமனனாகிச் சிறுத்து விடுகின்றது. பானை அளாவவும் வாமனன் ஆகவும் வாய்ப்பும் சூழலுமே காரணம். கல்லூரி, பல்கலைக் கழகம், ஆய்வுச் சூழல் என அவர்கள்தம் பணி விரிந்தபோது, மாணிக்கனார் தமிழண்ணல் போன்றோரின் ஆய்வுமுகம் ஊன்றிய கைகளால் அவர்தம் கவிதைமுகம் சிறுத்துப்போய் விட்டது. வாய்ப்பும் சூழலும் வாய்க்காமையால்தான் கவிஞர் முடியரசன் போன்றோர் ஒரே ஒரு முகத்தோடு மறைந்து போனார்கள். இங்கே மீரா அவர்களின் கவிதை முகம் வானத்தை அளாவியபோது ஆய்வு முகம் இந்த ஒரு நூலோடு ஒய்வெடுத்துக்கொண்டு விட்டது போலும். காலம் ஒன்றும் கடந்துவிடவில்லை. ஆய்வு முகமும் வானத்தை அளாவலாம். மீரா முயல்வாராக. முயன்றால் வெல்வார் என்பது உறுதி. முதற் பதிப்பின் முன்னுரையில் கவிஞர் மீரா அவர்கள் தான் இந்த நூலைப் படைத்ததற்கான காரணத்தைக் கூறுகின்றார். அது வருமாறு: அறம் வெல்லும்; பாவம் தோற்கும்; என்னும் கருத்தை ன்றாய் விளக்க எண்ணிச் சூத்திரகன் மிருச்சகடிக I4 -