பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தைப் படைத்தார். அதை நானிலத் தமிழர்க்கு நன்றாய் விளக்க வேண்டும் என்று பண்டிதமணி மண்ணியல் சிறுதேராய்ப் படைத்தார். அந்நாடகப் பெருமையைத் தமிழ் மாணவர்க்கு நன்றாய் விளக்க வேண்டும் என்று நான் இந்நூலைப் படைத்தேன்' என்கிறார். அதுசரி நீ என்ன சொல்கிறாய் என்கிறீர்களா? ஆம். இந்நூல் மாணவர்க்கு மட்டுமல்லாமல் மற்றவர்க்கும் கற்றவர்க்கும்கூட நன்றாகவே விளக்குகின்றது; விளங்கு கின்றது மலை விளக்கைப்போல என்று கூறி மேலொப்பம் இடுகின்றேன். அன்பன் காரைக்குடி. ॐ!,- பழனி