வணக்கம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், 'படித்த பெண்கள் என்னும் பெயரில் ஒரு நாடக நூலை இயற்றியிருக்கிறார். அதன் முன்னுரையில் 'பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும். அவர்கள் ஆண்களோடு சரிநிகரானவர்கள் - என்பனவற்றை விளக்க இதை எழுதினேன். நன்றாய் விளக்கவேண்டும் என்று இதை நாடகமாக அமைத்தேன்' என்கிறார். கவிஞரின் கூற்றிலிருந்து ஒரு கருத்தை நன்றாய் விளக்க உதவும் கலை நாடகக் கலை என்று தெரிகிறது. 'அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்னும் கருத்தை நன்றாய் விளக்க எண்ணிச் சூத்திரகன் மிருச்சகடிக நாடகத்தைப் படைத்தார். அதை, நானிலத் தமிழர்க்கு நன்றாய் விளக்கவேண்டும் என்று பண்டிதமணி மண்ணியல் சிறுதேராய்ப் படைத்தார். அந்நாடகப் பெருமையைத் தமிழ் மாணவர்க்கு நன்றாய் விளக்க வேண்டும் என்று நான் இந்நூலைப் படைத்தேன். இந்நூல் உருவாகத் துணை நின்றோர் இருவர்: ஒருவர் டாக்டர் தேவஸ்தாலி; மற்றொருவர், பேராசிரியர் தி.இராமானுசனார். முன்னவர் இயற்றிய 'மிருச்சகடிக ஆராய்ச்சிக்கு ஒரு முன்னுரை' என்னும் ஆங்கில 15
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/18
Appearance